மார்ச் 07, 2011

பெண்பாக்கள், மகளிர் தினம்

                                       


சீதை 
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.


திரெளபதை
ஐவர் பகிர்ந்துக் கொண்ட 
ஒற்றை இதயம்!


குந்திதேவி
கர்ணனை அனாதையாக்கி
“கன்னி”யம்! காத்தவள்.


காந்தாரி
இவளவன்
கண்கள் இரண்டால்
இவளும்
கண்கள் இருண்டாள்.


சூர்ப்பநகை
மூக்கறுப்பட்ட
முதல் காதல்!


அகலிகை
“கல்”லானாலும்
கணவன் என் கிடந்தவள்.


கண்ணகி
மதுரை ஓவியத்தை அழித்த
கற்புத் தூரிகை!


மாதவி
கணிகை குலத்தில் பிறந்த
கண்ணகி!


மணிமேகலை
கணிகை குலமும்
வணிக குலமும்
கலந்து செய்த
கடவுள் குலம்.


அமராவதி
காதல் வாசித்த
இரங்கற்பா.


கிளியோப்பாட்ரா
அரியனை யுத்தத்திற்கான
அழகு ஆயுதம்.


டயானா
ஆங்காங்கே கிழிக்கப்பட்ட
அழகியல் புத்தகம்.


அன்னை தெரசா
நிராகரிக்கப் பட்டவர்களின்
நிராகரிக்கப்படாத
கருணை மனு!


இந்திராகாந்தி
வேலியால் விழுந்த
வீரிய விருட்சம்


ஆங்சாங் சுகி அம்மையார்
உரிமைக்காக போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!


கிரண்பேடி
இருண்ட சிறையினுள்
புகுந்த வெளிச்சம்!


சான்சி ராணி
வல்லினம் மிரண்ட
மெல்லினம்.


ஒளவையார்
போர் முரசை தவிர்த்த
தமிழ் முரசு.


கல்பனா சாவ்லா
விண்வெளி லயித்த
கொலுசொலி!


பார்வதி (என் அம்மா)
என் 
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!


(இவைகளில் ஏதேனும் தவறாக பொருள் தந்தால் குறிப்பிடவும் திருத்திக்கொள்ளலாம்)98 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :)

மாணவன் சொன்னது…

முதலில் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

மகளிர் தினத்துக்காக ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணே :)

மாணவன் சொன்னது…

பதிவிட்ட அனைவருக்குமே பொருத்தமான வரிகளுடன் பதிவு சூப்பர்....

நிரூபன் சொன்னது…

மகளிர் தினம் கொண்டாடும் அனைத்து மான்புறு மங்கையர்களுக்கும் முதலில் வாழ்த்துக்கள். பெண்களை மையப்படுத்திப் புனையப்பட்ட பெண்பாக்கள் அருமை.
அதிலும் குந்திதேவி பற்றிய சிந்தனை,
இன்றைய காலத்தில் மரம் விட்டு மரம் தாவும் பெண்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இறுதியாக இன்னொன்றையும் சேர்த்திருக்கலாம்.

ஜெயலலிதா:??

புரட்சியாய் மாளிகைகள் கட்டி
புதுமைகள் படைக்கும் தலைவி!

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள கடைசி அம்மா கவிதையே சான்று..

தமிழ் உதயம் சொன்னது…

மூக்கறுப்பட்ட முதல் காதலா... கதலா...
கவிதை நன்றாக இருந்தது.

Harini Nathan சொன்னது…

தலைப்புகளுக்கு பொருத்தமான வரிகள் சகோ வாழ்த்துகள் :)

ஹேமா சொன்னது…

திருத்த என்ன இருக்கு அரசு.
அத்தனையும் ஒற்றைச்சொல்லில் பெண்பெருமை பேசும் பொன்மொழிகள் !

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கண்ணனை ?? கர்ணனை !!

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
மூக்கறுப்பட்ட முதல் காதலா... கதலா...
கவிதை நன்றாக இருந்தது.//

காதல் தான் தவறாக எழுதிவிட்டேன்.... சுட்டி காட்டியமைக்கு என் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
கண்ணனை ?? கர்ணனை !!//

கர்ணனை என்பதுதான் சரி.... எழுதும் போது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்...
சுட்டிகாட்டியமைக்கு என் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
கண்ணனை ?? கர்ணனை !!//

கர்ணனை என்பதுதான் சரி.... எழுதும் போது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்...
சுட்டிகாட்டியமைக்கு என் நன்றிங்க.

ஆயிஷா சொன்னது…

பொருத்தமான வரிகளுடன் கவிதை அருமை.

வானம்பாடிகள் சொன்னது…

நல்ல தொகுப்பு:)

தமிழ் 007 சொன்னது…

நண்பரே!

அனைத்து கவிதைகளையும் படித்து, பொருள் புரிந்து ரசித்தேன்.

பெண்மை போற்றும் இந்த கவிதைகள் மிக அருமை.

அன்புடன் அருணா சொன்னது…

அத்தனையும் அசத்தல்! பூங்கொத்து!

வைகை சொன்னது…

அனைத்துமே மறுக்கமுடியாதது!

ரிஷபன் சொன்னது…

ஆஹா.. அத்தனையுமே ரசனை.

r.v.saravanan சொன்னது…

அத்தனையும் அசத்தல்

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

thendralsaravanan சொன்னது…

அம்மாடியோவ்!அனைத்தும் அற்புத வரிகள்!

thendralsaravanan சொன்னது…

அழகான கவிதை!
பெண்மை போற்றும் இந்த கவிக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள்!

கோமதி அரசு சொன்னது…

என்
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!//
அம்மா வரமளிக்கும் தெய்வம் தான் உண்மை உண்மை.

மகளிர் தின சிறப்பு கவிதை அருமை.

உலக மகளிர்தின வாழ்த்துக்கள்.

ராஜ ராஜ ராஜன் சொன்னது…

அருமை... சிறப்பு...

கலா சொன்னது…

மகிளிரீன் மகிமையறிந்து
மனம் உவந்து படைத்த கவி
கண் கொள்ள ....
கருத்தின் ஆழம் வளிகிறது
பாத்திரங்களின் வழியாக...
பிடிக்க முடியவில்லை
அன்புடன் நான்{னில்}...

ரேவா சொன்னது…

அன்னை தெரசா
நிராகரிக்கப் பட்டவர்களின்
நிராகரிக்கப்படாத
கருணை மனு!கவிதை நன்றாக இருந்தது..அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மிக சிறப்பு வாழ்த்துகள் நண்பரே

Chitra சொன்னது…

சீதை
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.

......இதுவே இன்றும் சமுதாயத்தில் மிஞ்சி நிற்கிறது.

..... ஒவ்வொன்றும் காவியம் பேசுகின்றன. பாராட்டுக்கள்!

மணிமேகலா சொன்னது…

கவிதைகள் எல்லாம் அசத்தல்!
3,4 வரிக்குள் பெண்ணின் வாழ்க்கை!

சிக்கன வரிக்குள் அந்த சிந்தனை அற்புதம்.

சத்ரியன் சொன்னது…

பெண் மொழிகள்!

எல் கே சொன்னது…

/ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.//

தவறான புரிதல். தயவு செய்து இன்றைய கண்ணோடு பழைய கால சம்பவங்களைப் பார்க்காதீர்கள்

Jeeves சொன்னது…

:)))

அரசன் சொன்னது…

அனைத்தும் மிக அற்புதமாய்
இருந்தது மாமா ....

அரசன் சொன்னது…

எது சிறந்தது என்று கோடிட இயலா வரிகள் அனைத்துமே

அரசன் சொன்னது…

மகளிரின் சிறப்புகளை தரமாய் வழங்கிய உங்களுக்கு நன்றிகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அரியணை யுத்தம்
பெண்பூக்களின்
பெருமை கூறிய
கவிதைக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

மகளிர் தின வாழ்த்துக்கள்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

நெல்லி. மூர்த்தி சொன்னது…

காவியம் படைத்தவர்களை
கவிதையில் விதைத்துள்ளீர்
மாண்புகளுடனே வடிவமைத்து
மனதினில் தைத்துள்ளீர்

மனமார்ந்த மகளிர் தினவாழ்த்துக்கள்!

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

பெண்மை போற்றும் இந்த கவிதைகள் அருமை.

இன்றைய கவிதை சொன்னது…

இவளவன்
கண்கள் இரண்டால்
இவளும்
கண்கள் இருண்டாள்.


கருணாகரசு மிக மிக அருமை ஒவ்வொன்றும் அபாரம் பெண்மைக்கு ஒரு அழகு சான்று
போற்றி இந்த கவிதையை வீட்டில் எங்கும் ஒட்டி வைக்கலாம் அவ்வள்வு அழகு

நன்றி கருணாகரசு

ஜேகே

பெயரில்லா சொன்னது…

மகளிருக்கு கவிபாடிய
உமக்கு
எந்த வெண்பா பாடுவது?

Pavi சொன்னது…

சூப்பர்

சி.கருணாகரசு சொன்னது…

மாணவன் கூறியது...
வணக்கம் அண்ணே :)//மாணவன் கூறியது...
மகளிர் தினத்துக்காக ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணே :)
//

மாணவனின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

நிரூபன் கூறியது...
மகளிர் தினம் கொண்டாடும் அனைத்து மான்புறு மங்கையர்களுக்கும் முதலில் வாழ்த்துக்கள். பெண்களை மையப்படுத்திப் புனையப்பட்ட பெண்பாக்கள் அருமை.
அதிலும் குந்திதேவி பற்றிய சிந்தனை,
இன்றைய காலத்தில் மரம் விட்டு மரம் தாவும் பெண்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இறுதியாக இன்னொன்றையும் சேர்த்திருக்கலாம்.

ஜெயலலிதா:??

புரட்சியாய் மாளிகைகள் கட்டி
புதுமைகள் படைக்கும் தலைவி!//

வருகைக்கு வணக்கம்... ஜெயலலிதாவை எழுதலாம்தான் அவங்க தன்னபிக்கையும் உறுதியும் எனக்கு பிடிக்கும்

ஆனா நான் இந்த இடத்தில் அரசியலை தவிர்க்க விரும்பினேன்,
மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் கூறியது...
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள கடைசி அம்மா கவிதையே சான்று..
//

நன்றிங்க கருன்.

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
மூக்கறுப்பட்ட முதல் காதலா... கதலா...
கவிதை நன்றாக இருந்தது.//

வருகைக்கு நன்றிங்க திருத்திவிட்டேன்,

சி.கருணாகரசு சொன்னது…

Harini Nathan கூறியது...
தலைப்புகளுக்கு பொருத்தமான வரிகள் சகோ வாழ்த்துகள் :)
//

மிக்க நன்றிங்க ...... நாதன்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
திருத்த என்ன இருக்கு அரசு.
அத்தனையும் ஒற்றைச்சொல்லில் பெண்பெருமை பேசும் பொன்மொழிகள் !
//

நன்றிங்க ஹேமா.

சி.கருணாகரசு சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
கண்ணனை ?? கர்ணனை !!
//

திருத்திவிட்டேன் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

ஆயிஷா கூறியது...
பொருத்தமான வரிகளுடன் கவிதை அருமை.
//

நன்றிங்க ஆயிஷா.

சி.கருணாகரசு சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
நல்ல தொகுப்பு:)//

நன்றிங்கைய்யா.

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ் 007 கூறியது...
நண்பரே!

அனைத்து கவிதைகளையும் படித்து, பொருள் புரிந்து ரசித்தேன்.

பெண்மை போற்றும் இந்த கவிதைகள் மிக அருமை.//

மிக்க நன்றிங்க தமிழ்

சி.கருணாகரசு சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...
அத்தனையும் அசத்தல்! பூங்கொத்து!//

மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

வைகை கூறியது...
அனைத்துமே மறுக்கமுடியாதது!
//

நன்றிங்க வைகை.

சந்தான சங்கர் சொன்னது…

மறைந்துவிட்டவர்களுக்கு பின்
நிறைந்துவிட்ட அன்னை...

சந்தான சங்கர்.

Geetha6 சொன்னது…

அருமை.,வாழ்த்துகள் !

சி.கருணாகரசு சொன்னது…

ரிஷபன் கூறியது...
ஆஹா.. அத்தனையுமே ரசனை//

மிக்க நன்றிங்க ரிஷபன்

சி.கருணாகரசு சொன்னது…

r.v.saravanan கூறியது...
அத்தனையும் அசத்தல்

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..//

நன்றிங்க சரவணன்

சி.கருணாகரசு சொன்னது…

thendralsaravanan கூறியது...
அம்மாடியோவ்!அனைத்தும் அற்புத வரிகள்!

7 மார்ச், 2011 10:10 pm

thendralsaravanan கூறியது...
அழகான கவிதை!
பெண்மை போற்றும் இந்த கவிக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள்!//

உங்களுக்கு என் நன்றிகள்.

Part Time Jobs சொன்னது…

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Ramani சொன்னது…

புதிய சிந்தனை.புதிய பார்வை
மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு சொன்னது…

ம்ம்.. சூப்பருங்க... ரொம்ப வித்தியாசமாகவும் நல்லாவும் இருந்தது..

எஸ்.கே சொன்னது…

தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_6398.html

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

அருமையான வகைப்பாட்டியல்... கலக்கல் அண்ணா!!

வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!

Free Traffic சொன்னது…

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

சி.கருணாகரசு சொன்னது…

ரிஷபன் கூறியது...
ஆஹா.. அத்தனையுமே ரசனை.//

மிக்க நன்றிங்க ரிஷபன்.

சி.கருணாகரசு சொன்னது…

r.v.saravanan கூறியது...
அத்தனையும் அசத்தல்

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.ஆர்.கே.எஸ்

சி.கருணாகரசு சொன்னது…

thendralsaravanan கூறியது...
அம்மாடியோவ்!அனைத்தும் அற்புத வரிகள்!

7 மார்ச், 2011 10:10 pm

thendralsaravanan கூறியது...
அழகான கவிதை!
பெண்மை போற்றும் இந்த கவிக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றிங்க தென்றல்.

சி.கருணாகரசு சொன்னது…

கோமதி அரசு கூறியது...
என்
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!//
அம்மா வரமளிக்கும் தெய்வம் தான் உண்மை உண்மை.

மகளிர் தின சிறப்பு கவிதை அருமை.

உலக மகளிர்தின வாழ்த்துக்கள்.

//

நன்றிங்க கோமதியரசு.

சி.கருணாகரசு சொன்னது…

ராஜ ராஜ ராஜன் கூறியது...
அருமை... சிறப்பு...

//

ராஜனுக்கு நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

கலா கூறியது...
மகிளிரீன் மகிமையறிந்து
மனம் உவந்து படைத்த கவி
கண் கொள்ள ....
கருத்தின் ஆழம் வளிகிறது
பாத்திரங்களின் வழியாக...
பிடிக்க முடியவில்லை
அன்புடன் நான்{னில்}...//

நன்றிங்க கலா.

சி.கருணாகரசு சொன்னது…

ரேவா கூறியது...
அன்னை தெரசா
நிராகரிக்கப் பட்டவர்களின்
நிராகரிக்கப்படாத
கருணை மனு!கவிதை நன்றாக இருந்தது..அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்//

ரேவா அவர்களுக்கு நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
மிக சிறப்பு வாழ்த்துகள் நண்பரே//

மிக்க நன்றி நண்பா.

சி.கருணாகரசு சொன்னது…

Chitra கூறியது...
சீதை
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.

......இதுவே இன்றும் சமுதாயத்தில் மிஞ்சி நிற்கிறது.

..... ஒவ்வொன்றும் காவியம் பேசுகின்றன. பாராட்டுக்கள்!//

மிக்க நன்றிகள்...

சி.கருணாகரசு சொன்னது…

மணிமேகலா கூறியது...
கவிதைகள் எல்லாம் அசத்தல்!
3,4 வரிக்குள் பெண்ணின் வாழ்க்கை!

சிக்கன வரிக்குள் அந்த சிந்தனை அற்புதம்.//

மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

சத்ரியன் கூறியது...
பெண் மொழிகள்!//

சரி.

சி.கருணாகரசு சொன்னது…

எல் கே கூறியது...
/ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.//

தவறான புரிதல். தயவு செய்து இன்றைய கண்ணோடு பழைய கால சம்பவங்களைப் பார்க்காதீர்கள்//

தன் மனைவியை நெருப்பில் தள்ளி சோதிப்பது... சரியா?

எனக்கு தவறாகப்பட்டது.... எந்த காலமாக இருந்தாலும் சரி.....
(மன்னிக்கவும்)

சி.கருணாகரசு சொன்னது…

Jeeves கூறியது...
:)))//

!!!!!!!

சி.கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
அனைத்தும் மிக அற்புதமாய்
இருந்தது மாமா ....

8 மார்ச், 2011 4:35 pm

அரசன் கூறியது...
எது சிறந்தது என்று கோடிட இயலா வரிகள் அனைத்துமே

8 மார்ச், 2011 4:36 pm

அரசன் கூறியது...
மகளிரின் சிறப்புகளை தரமாய் வழங்கிய உங்களுக்கு நன்றிகள்//

மிக்க நன்றி ராசா.

சி.கருணாகரசு சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
அரியணை யுத்தம்
பெண்பூக்களின்
பெருமை கூறிய
கவிதைக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்.//

நன்றிகள் நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

சே.குமார் கூறியது...
மகளிர் தின வாழ்த்துக்கள்//

நன்றிங்க குமார்

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

நன்றிங்க....

சி.கருணாகரசு சொன்னது…

நெல்லி. மூர்த்தி கூறியது...
காவியம் படைத்தவர்களை
கவிதையில் விதைத்துள்ளீர்
மாண்புகளுடனே வடிவமைத்து
மனதினில் தைத்துள்ளீர்

மனமார்ந்த மகளிர் தினவாழ்த்துக்கள்!//

நன்றிங்க மூர்த்தி.

சி.கருணாகரசு சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
இவளவன்
கண்கள் இரண்டால்
இவளும்
கண்கள் இருண்டாள்.


கருணாகரசு மிக மிக அருமை ஒவ்வொன்றும் அபாரம் பெண்மைக்கு ஒரு அழகு சான்று
போற்றி இந்த கவிதையை வீட்டில் எங்கும் ஒட்டி வைக்கலாம் அவ்வள்வு அழகு

நன்றி கருணாகரசு

ஜேகே//

மிக்க நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

"குறட்டை " புலி கூறியது...
மகளிருக்கு கவிபாடிய
உமக்கு
எந்த வெண்பா பாடுவது?//

ரசனைக்கு நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

Pavi கூறியது...
சூப்பர்//

மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

சந்தான சங்கர் கூறியது...
மறைந்துவிட்டவர்களுக்கு பின்
நிறைந்துவிட்ட அன்னை...

சந்தான சங்கர்.//

மிக்க நன்றிங்க சங்கர்.

சி.கருணாகரசு சொன்னது…

Geetha6 கூறியது...
அருமை.,வாழ்த்துகள் !

//

மிக்க நன்றிங்க கீதா.

சி.கருணாகரசு சொன்னது…

ஜெஸ்வந்தி - Jeswanthy கூறியது...
பெண்மை போற்றும் இந்த கவிதைகள் அருமை.//

ஜெஸ்வந்திக்கு நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

Ramani கூறியது...
புதிய சிந்தனை.புதிய பார்வை
மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...
ம்ம்.. சூப்பருங்க... ரொம்ப வித்தியாசமாகவும் நல்லாவும் இருந்தது..//

நன்றிங்க பாபு.

சி.கருணாகரசு சொன்னது…

எஸ்.கே கூறியது...
தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_6398.html

//

மிக்க நன்றிங்க எஸ்.கே.

சி.கருணாகரசு சொன்னது…

அருமையான வகைப்பாட்டியல்... கலக்கல் அண்ணா!!

வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!//

மிக்க நன்றிங்க.... வருகிறேன்.

சி.கருணாகரசு சொன்னது…

Free Traffic கூறியது...
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com//

இது என்னவா இருக்கும்?????????????

சி.கருணாகரசு சொன்னது…

Part Time Jobs கூறியது...
No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி//

நன்றிங்க.....

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

//
பார்வதி (என் அம்மா)
என்
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!//

நான் மிகவும் ரசித்தேன் இந்த அம்மா
கவிதையை. மற்ற கவிதைகளும் அருமை நண்பரே.

சி.கருணாகரசு சொன்னது…

புவனேஸ்வரி ராமநாதன் கூறியது...
//
பார்வதி (என் அம்மா)
என்
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!//

நான் மிகவும் ரசித்தேன் இந்த அம்மா
கவிதையை. மற்ற கவிதைகளும் அருமை நண்பரே.//

உங்க வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails