பிப்ரவரி 10, 2011

கண்ணீர் கரைந்த தருணம் 1

வணக்கம்.... 

(இது என் முதல் கட்டுரை வடிவம்)

இந்த நிகழ்வு நிகழ்ந்து கால் நூற்றாண்டை நெருங்குகிறது....
ஆனால்... ஏதாவது ஒரு தருணத்தில் மனதில் தோன்றி புத்தியில் உரைத்து... நெஞ்சை கீறுகிறது....

எனக்கு அப்போது பத்துக்கும் குறைவான வயது....  என் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள செந்துரை என்னும் நடுத்தர நகரத்தில்.... ஸ்ரீராம் நர்சரி பள்ளியில், இரண்டாம் வகுப்போ அல்லது மூன்றாம் வகுப்போ (தமிழ்வழி கல்வி) படித்துக்கொண்டிருந்தேன்....

பள்ளி தொடங்கிய ஓரிரு மாதத்தில் புதிதாக ஒரு மிஸ் (ஆசிரியர்) வந்தாங்க.
அவங்களும் மற்ற ஆசிரியர் போலவே மிரட்டலாக இருப்பார்கள் என் நினைத்து பயந்தேன்.  அவுங்க எங்களிம் பழகியவிதம் சொல்லிகொடுத்த பாங்கு.... அப்படி ஒரு ஆசிரியரை அதன்பின் சந்திக்கவே இல்லன்னு சொல்லலாம்.
அவங்க தான் சுசீலா மிஸ். வயது 20 திலிருந்து 22 இருக்கலாம். மிதமான அழகு ஆனா அவங்கதான் எங்களுக்கு தேவதை... அவங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும் என்னை கூடுதலா பிடிக்கும். எங்களுக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாந்தான் அவங்க செல்லம் அவங்க வீட்டுக்குகூட என்னை அழைத்து போயிருக்காங்க.
பள்ளிக்குக் பக்கத்திலேயே தங்கியிருந்தாங்க.   அவங்களுக்குத் தேவையான   பள்ளிச் சம்மந்தப்பட்ட சில பொருட்களைக் கூட என்னைதான் வாங்கி வரசொல்லுவாங்க. ஒருமுறை கிருஷ்ணன் படம் போட்ட பொங்கல் வாழ்த்து வாங்கி தந்திருக்கேன். (விலை 20 காசுகள்) பள்ளி கலை நிகழ்வுகளிலும்,விளையாட்டிலும்,பாடங்களிலிலும் தனக்கான பங்கை மிக நேர்த்தியாக செய்தார் சுசீலா மிஸ்.

மற்றும் சுசீலா மிஸ் வராத நாட்கள் மிக ரணமாக நகரும்... அவர்களைக் கண்டால் புதிய உற்சாகம். பாடம் படிக்காவிட்டால் அடிக்க மாட்டாங்க... கோபித்து கொள்வார்கள். பேச மாட்டாங்க அதற்காகவே எப்படியாவது படித்து விடுவோம். அபோதெல்லாம் பள்ளிகளில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் நடைமுறை உண்டு.
நாங்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களுக்கான சேமிப்பு கணக்கை எங்க சுசீலா மிஸ் தான் பாத்துகிட்டாங்க. எங்களுக்கு கிடைக்கும் 10காசுகள்,20 காசுகளை சுசீலா மிஸ்கிட்டதான் கொடுத்து வைப்போம் அவங்களும் ஒரு நோட்டுல எழுதி வைப்பாங்க...

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிக்கு சென்றோம்.
மற்ற மிஸ்களிடம் ஒரு இறுக்கம் காணப்பட்டது. எங்க சுசீலா மிஸ் இன்னும் வரல பள்ளித் தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்துக்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் உஷா மிஸ் சுரத்தே இல்லாமல் பேசினாங்க . நம்மோடு ... .... ..... வாழ்ந்த சுசீலா மிஸ் நேற்று இறந்துட்டாங்க.... ..... ...  நான் அழுதேன் வழிந்தோடிய கண்ணீரை மேல்சட்டையின் நுனிகளால் துடைத்துக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறினேன்...(அனைவரும் வெளியேறினோம். அன்று விடுமுறை) சற்று தூரத்தில் இருந்த சுசீலா மிஸ் வீட்டு பக்கம் போனேன், அவங்க வீட்டு முன்னாடி அவங்களை குளிப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.

கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைத்த... நினைக்கும் கேள்விகள்.

1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

 (சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)
  
  இது எங்கள் தேவதை சுசீலா மிஸ்க்கான... நினைவேந்தல்.

74 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

எல்லோர் மனதில் சில ஆசிரியைகள் பசுமரத்தாணிப்போல் பதிந்து விடுவார்கள்..

அதுபோன்று தருணங்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இனிக்கும்

பாட்டு ரசிகன் சொன்னது…

ஆசிரியையின் மறைவு உண்மையில் உங்களை மிகவும் பாதித்துள்ளது..
இது தான் ஆசிரியைக்கு கிடைத்த பெருமை...

sundarmeenakshi சொன்னது…

ipaadi nalla techer parpathu rempa arithu.
ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
mandhai ennamo pannudhu

பா.ராஜாராம் சொன்னது…

மிக நெகிழ்வான பகிர்வு கருணா.

காலம் தாழ்ந்தாலும் என் அஞ்சலிகள்- சுசிலா மிஸ்-க்கு.

தமிழ் உதயம் சொன்னது…

எல்லோரது மனதிலும் அழியாத இடம் ஏதாவது ஒரு ஆசிரியைக்கு உள்ளது. அவர்களை நினைக்கும்போது, சில நேரம் மனதுக்கு ஆறுதலாக, சில நேரம் மனதுக்கு கஷ்டமாக...

Ramani சொன்னது…

இதைப் படித்த எங்களுக்கே கண்ணீர் முட்டுகிறது
நேரடியாக தொடர்புகொண்டிருந்த உங்கள் நிலையை
எங்களால் ஓரளவு புரிந்து கொள்ளமுடிகிறது
காலமே ஆறுதல் தரும் மருந்து வேறு என்ன சொல்லமுடியும்

கே. ஆர்.விஜயன் சொன்னது…

கண்ணீர் நிறைந்துவிட்டது பதிவை படித்து முடிக்கும் போது முகம் தெரியா அந்த சுசீலா மிஸ் க்காக. முதல் பதிவே மனதை கடுமையாக பாதித்துவிட்டதே.

வைகை சொன்னது…

சில சோகங்களுக்கு காலம்கூட மருந்திடாதுபோல?! :((

அரசன் சொன்னது…

உண்மையில் இதை படிக்கும் போது மனம் பதைக்கிறது ....
பலருக்கு அது ஒரு நிகழ்வு ...
வெகு சிலருக்கு தான் அது இழப்பு ...
உங்களின் வலியில் அந்த இழப்பு தெரிகிறது மாமா .....

அரசன் சொன்னது…

கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்.

1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

(சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)

இது எஙகள் தேவதை சுசீலா மிஸ்க்கான... நினைவேந்தல்.
//

வலிகொண்ட கேள்விகள் மாமா ...
ஆனால் அதற்க்கு பதில் தான் இல்லாமலே போனது ...
கால் நூற்றாண்டை கடந்தும் உங்களின் இதயத்தில் நிலைத்து நிற்கும் அந்த ஆசிரியையின் ஆன்மா சாந்தி அடையட்டும்

அரசன் சொன்னது…

அவங்களை குளுப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.
//

இந்த இடத்தில மனது வலியை வார்த்தைகளில் கூற இயலாதுங்க மாமா ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?//

மனசை கலங்க வச்சிட்டீங்களே மக்கா.....

மாணவன் சொன்னது…

முதல் கட்டுரை.. பதிவே உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சொல்லி நெகிழ வைத்துவிட்டீர்கள் ...

மாணவன் சொன்னது…

//நம்மோடு ... .... ..... வாழ்ந்த சுசீலா மிஸ் நேற்று இறந்துட்டாங்க.... ..... ... நான் அழுதேன் வழிந்தோடிய கண்ணீரை மேல்சட்டையின் நுனிகளால் துடைத்துக்கொண்டு...அனைவரும் வெளியேறினோம். (அன்று விடுமுறை) சற்று தூரத்தில் இருந்த சுசிலா மிஸ் வீட்டு பக்கம் போனேன், அவங்க வீட்டு முன்னாடி அவங்களை குளுப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.//

படிக்கும்போதே மனது கனக்கிறது.. எங்களுக்கே இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை நேரில் பார்த்து கூடவே இருந்த உங்களுக்கு???

மாணவன் சொன்னது…

//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

(சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)//

இப்படிபட்ட தேவதையை இளம் வயதிலேயே பறித்து கொண்ட இறைவனை என்ன சொல்வது???

thendralsaravanan சொன்னது…

இங்கு மாணவனின் நேசத்தை சொல்வதா அல்லது அன்பை உணர்த்திய ஆசிரியரை சொல்வதா!
மறைந்தும் மனதில் பதிந்த ஆசிரியர் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!

மதுரை சரவணன் சொன்னது…

great...

Chitra சொன்னது…

என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்தான் செய்தது.... பாவம்ங்க! சிறு வயதிலேயே இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களே!
இன்னும் உங்கள் மனதை விட்டு நீங்கமால் இருப்பதில் இருந்தே, அந்த நல்ல உள்ளத்தின் மேல் வைத்து இருக்கும் மதிப்பும் பாசமும் புரிகிறது.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனது அஞ்சலிகள் ...

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல பகிர்வு. பள்ளிக் கூடம் படத்தில் கூட இளம் ஆசிரியை மாணவர் உறவை நன்றாகப் படம் ஆக்கி இருப்பார்கள்.

கோமதி அரசு சொன்னது…

20 வயதில் அவர்களை மரணத்துக்கு தள்ளிய அந்த நிகழ்வு ஏன் ஏற்பட்டது?
ஏன் இந்த முடிவு என்று கேட்க தோன்றுகிறது.

நெகிழ்வான பதிவு.

என் மனமும் கரைந்தது.

A.சிவசங்கர் சொன்னது…

மரணம் ஒரு -------------

உங்கள் நினைவுகளில் நாங்களும்

sakthistudycentre-கருன் சொன்னது…

ஆசிரியையின் மறைவு உண்மையில் உங்களை மிகவும் பாதித்துள்ளது..
இது தான் ஆசிரியைக்கு கிடைத்த பெருமை...

காலம் தாழ்ந்தாலும் என் அஞ்சலிகள்..

வசந்தா நடேசன் சொன்னது…

கண்கள் நிறைந்தன.. உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

////கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்.////

எண்ணச் சிதறலை நீட்டிச் சென்று ஒற்றைப் புள்ளியில் ஒருமிக்க வச்சிட்டிங்க...

கலாநேசன் சொன்னது…

நெஞ்சைத் தொடும் நெகிழ்வான பதிவு.

நிரூபன் சொன்னது…

. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்//

மனதினுள் இன்றும் மர்மமாக இருக்கும் வினாக்களோடு கலந்த நினைவு மீட்டல் பதிவு அருமை. உங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இவ் ஆசிரியரின் செயற்பாடுகள் இளமையில் கல்வியை இனிமையாக கற்க வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் அவரை நினைக்கிறீர்கள் என்றால், அவரின் கற்பித்தலின் பெருமையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

அவரின் மறைவு கல்லூரிக்கும், உங்களைப் போன்ற நல் உள்ளங்களுக்கும் கிடைத்த பேரிடி. எனினும் அவரின் நினைவுகளோடு பயணத்தைத் தொடரும் உங்களின் பதிவினைப் பார்த்ததன் ஊடாக நல்ல மனிதத்தை உணர்ந்த மகிழ்ச்சி தோழா.

thirumathi bs sridhar சொன்னது…

ஆசிரியர் ஒருவரை இழந்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ள விதம்,
மனம் பாரமாகிறது

asiya omar சொன்னது…

இனி சுசீலான்னு பெயரக்கேட்டால் உங்க சுசீலா மிஸ் நினைவு வரும்படி பகிர்வு மனதை தொட்டது.

சென்னை பித்தன் சொன்னது…

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில நினைவுகள் தேய்வதில்லை;சில ரணங்கள் ஆறுவதில்லை;சில சோகங்கள் மறைவதில்லை.
' gods love those who die young’ என்று சொல்வார்கள்.அதுவே ஒரு ஆறுதல்.வேறென்ன சொல்ல?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மரணம் பிரித்த ஆசிரியைக்கு காலம் கடந்தும் உங்கள் மனதை விட்டுப் பிரிக்க முடிய வில்லையே!!

sakthistudycentre-கருன் சொன்னது…

புதுப் பதிவு எப்ப சார்..

Part Time Jobs சொன்னது…

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

தமிழ்மணி சொன்னது…

இதயத்தை கனமாக்கி விட்டிர்கள் நட்பு.....

சே.குமார் சொன்னது…

மிக நெகிழ்வான பகிர்வு.

சி.கருணாகரசு சொன்னது…

பாட்டு ரசிகன் கூறியது...
எல்லோர் மனதில் சில ஆசிரியைகள் பசுமரத்தாணிப்போல் பதிந்து விடுவார்கள்..

அதுபோன்று தருணங்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இனிக்கும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க... பாட்டு ரசிகன்

சி.கருணாகரசு சொன்னது…

பாட்டு ரசிகன் கூறியது...
ஆசிரியையின் மறைவு உண்மையில் உங்களை மிகவும் பாதித்துள்ளது..
இது தான் ஆசிரியைக்கு கிடைத்த பெருமை...
//

இருக்கலாம்....

சி.கருணாகரசு சொன்னது…

sundarmeenakshi கூறியது...
ipaadi nalla techer parpathu rempa arithu.
ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
mandhai ennamo pannudhu
//

வருகைக்கு நன்றிங்க....

சி.கருணாகரசு சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
மிக நெகிழ்வான பகிர்வு கருணா.

காலம் தாழ்ந்தாலும் என் அஞ்சலிகள்- சுசிலா மிஸ்-க்கு.//

தங்களின் வருகைக்கு என் வணக்கம் பாரா.

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
எல்லோரது மனதிலும் அழியாத இடம் ஏதாவது ஒரு ஆசிரியைக்கு உள்ளது. அவர்களை நினைக்கும்போது, சில நேரம் மனதுக்கு ஆறுதலாக, சில நேரம் மனதுக்கு கஷ்டமாக.//

நீங்க சொல்வது சரிதான் தமிழ் உதயம்.

சி.கருணாகரசு சொன்னது…

Ramani கூறியது...
இதைப் படித்த எங்களுக்கே கண்ணீர் முட்டுகிறது
நேரடியாக தொடர்புகொண்டிருந்த உங்கள் நிலையை
எங்களால் ஓரளவு புரிந்து கொள்ளமுடிகிறது
காலமே ஆறுதல் தரும் மருந்து வேறு என்ன சொல்லமுடியும்//

வருகைக்கும் ஆறுதல் வார்த்தைக்கும் நன்றிங்கைய்யா.

சி.கருணாகரசு சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
கண்ணீர் நிறைந்துவிட்டது பதிவை படித்து முடிக்கும் போது முகம் தெரியா அந்த சுசீலா மிஸ் க்காக. முதல் பதிவே மனதை கடுமையாக பாதித்துவிட்டதே.//

ஆண்டு கணக்காய் மனதை அறுத்த நிகழ்வு...அதான் பதிவா பதிந்தேன்.

சி.கருணாகரசு சொன்னது…

வைகை கூறியது...
சில சோகங்களுக்கு காலம்கூட மருந்திடாதுபோல?! :((

ஆமாம் வைகை...அது நிகழ்வின் அடர்த்தியை பொறுத்தது.

சி.கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
உண்மையில் இதை படிக்கும் போது மனம் பதைக்கிறது ....
பலருக்கு அது ஒரு நிகழ்வு ...
வெகு சிலருக்கு தான் அது இழப்பு ...
உங்களின் வலியில் அந்த இழப்பு தெரிகிறது மாமா ....//

நெடுங்காலம் என்னை வருத்திய நிகழ்வு இது.

சி.கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்.

1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

(சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)

இது எஙகள் தேவதை சுசீலா மிஸ்க்கான... நினைவேந்தல்.
//

வலிகொண்ட கேள்விகள் மாமா ...
ஆனால் அதற்க்கு பதில் தான் இல்லாமலே போனது ...
கால் நூற்றாண்டை கடந்தும் உங்களின் இதயத்தில் நிலைத்து நிற்கும் அந்த ஆசிரியையின் ஆன்மா சாந்தி அடையட்டும்//

சுசீலா மிஸ்..இறப்பதற்கு இரண்டு நாள் முன் தான் எல்லா சிறுசேமிப்பு காசுகளையும் திருப்பிதந்தார்....

சி.கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
அவங்களை குளுப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.
//

இந்த இடத்தில மனது வலியை வார்த்தைகளில் கூற இயலாதுங்க மாமா ...//

அவங்க குடியிருந்தது பழைய பாரத வங்கிக்கு முன்புறம்.... இப்ப அந்த கூரைவீடு காணும்.

சி.கருணாகரசு சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?//

மனசை கலங்க வச்சிட்டீங்களே மக்கா.....//

தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

சி.கருணாகரசு சொன்னது…

மாணவன் கூறியது...
முதல் கட்டுரை.. பதிவே உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சொல்லி நெகிழ வைத்துவிட்டீர்கள் ...//

வருகைக்கு நன்றிங்க மாணவன்.

சி.கருணாகரசு சொன்னது…

மாணவன் கூறியது...
//நம்மோடு ... .... ..... வாழ்ந்த சுசீலா மிஸ் நேற்று இறந்துட்டாங்க.... ..... ... நான் அழுதேன் வழிந்தோடிய கண்ணீரை மேல்சட்டையின் நுனிகளால் துடைத்துக்கொண்டு...அனைவரும் வெளியேறினோம். (அன்று விடுமுறை) சற்று தூரத்தில் இருந்த சுசிலா மிஸ் வீட்டு பக்கம் போனேன், அவங்க வீட்டு முன்னாடி அவங்களை குளுப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.//

படிக்கும்போதே மனது கனக்கிறது.. எங்களுக்கே இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை நேரில் பார்த்து கூடவே இருந்த உங்களுக்கு??//

அந்த வருத்தம் என்றும் அகலாதுங்க ...

சி.கருணாகரசு சொன்னது…

மாணவன் கூறியது...
//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

(சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)//

இப்படிபட்ட தேவதையை இளம் வயதிலேயே பறித்து கொண்ட இறைவனை என்ன சொல்வது??//

என்னசெய்வது....

சி.கருணாகரசு சொன்னது…

thendralsaravanan கூறியது...
இங்கு மாணவனின் நேசத்தை சொல்வதா அல்லது அன்பை உணர்த்திய ஆசிரியரை சொல்வதா!
மறைந்தும் மனதில் பதிந்த ஆசிரியர் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!//

மிக்க நன்றிங்க தென்றல்சரவணன்.

சி.கருணாகரசு சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...
great...//

நன்றிங்க மதுரைசரவணன்.

சி.கருணாகரசு சொன்னது…

Chitra கூறியது...
என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்தான் செய்தது.... பாவம்ங்க! சிறு வயதிலேயே இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களே!
இன்னும் உங்கள் மனதை விட்டு நீங்கமால் இருப்பதில் இருந்தே, அந்த நல்ல உள்ளத்தின் மேல் வைத்து இருக்கும் மதிப்பும் பாசமும் புரிகிறது.//

என்றும் அவங்க என் மதிப்புக்குறியவங்க....

சி.கருணாகரசு சொன்னது…

Chitra கூறியது...
என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்தான் செய்தது.... பாவம்ங்க! சிறு வயதிலேயே இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களே!
இன்னும் உங்கள் மனதை விட்டு நீங்கமால் இருப்பதில் இருந்தே, அந்த நல்ல உள்ளத்தின் மேல் வைத்து இருக்கும் மதிப்பும் பாசமும் புரிகிறது.//

என்றும் அவங்க என் மதிப்புக்குரியவங்க....

சி.கருணாகரசு சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
எனது அஞ்சலிகள் ...//

நன்றிங்க தோழர்.

சி.கருணாகரசு சொன்னது…

கோவி.கண்ணன் கூறியது...
நல்ல பகிர்வு. பள்ளிக் கூடம் படத்தில் கூட இளம் ஆசிரியை மாணவர் உறவை நன்றாகப் படம் ஆக்கி இருப்பார்கள்.//

வருகைக்கு என் நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

கோமதி அரசு கூறியது...
20 வயதில் அவர்களை மரணத்துக்கு தள்ளிய அந்த நிகழ்வு ஏன் ஏற்பட்டது?
ஏன் இந்த முடிவு என்று கேட்க தோன்றுகிறது.

நெகிழ்வான பதிவு.

என் மனமும் கரைந்தது.//

கருத்துக்கு என் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

A.சிவசங்கர் கூறியது...
மரணம் ஒரு -------------

உங்கள் நினைவுகளில் நாங்களும்//

தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

சி.கருணாகரசு சொன்னது…

sakthistudycentre-கருன் கூறியது...
ஆசிரியையின் மறைவு உண்மையில் உங்களை மிகவும் பாதித்துள்ளது..
இது தான் ஆசிரியைக்கு கிடைத்த பெருமை...

காலம் தாழ்ந்தாலும் என் அஞ்சலிகள்//

மிக்க நன்றிங்க... திரு கருன்

சி.கருணாகரசு சொன்னது…

வசந்தா நடேசன் கூறியது...
கண்கள் நிறைந்தன.. உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.//

உங்களுக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

ம.தி.சுதா கூறியது...
////கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்.////

எண்ணச் சிதறலை நீட்டிச் சென்று ஒற்றைப் புள்ளியில் ஒருமிக்க வச்சிட்டிங்க...//

வருகைக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

கலாநேசன் கூறியது...
நெஞ்சைத் தொடும் நெகிழ்வான பதிவு.//

தங்களின் வருகைக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

நிரூபன் கூறியது...
. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்//

மனதினுள் இன்றும் மர்மமாக இருக்கும் வினாக்களோடு கலந்த நினைவு மீட்டல் பதிவு அருமை. உங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இவ் ஆசிரியரின் செயற்பாடுகள் இளமையில் கல்வியை இனிமையாக கற்க வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் அவரை நினைக்கிறீர்கள் என்றால், அவரின் கற்பித்தலின் பெருமையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

அவரின் மறைவு கல்லூரிக்கும், உங்களைப் போன்ற நல் உள்ளங்களுக்கும் கிடைத்த பேரிடி. எனினும் அவரின் நினைவுகளோடு பயணத்தைத் தொடரும் உங்களின் பதிவினைப் பார்த்ததன் ஊடாக நல்ல மனிதத்தை உணர்ந்த மகிழ்ச்சி தோழா.
//

அந்த நிகழ்வு எப்படி என் மனதில் தங்கியது என்றே தெரியல... ஆனா நினைக்கும் போது வருத்தப்படுவேன்.... மிஸ் இப்ப இருந்திருந்தா நல்லாயிருக்குமே அப்படின்னு நினைவு வரும்.....
உங்க வருகைக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

thirumathi bs sridhar கூறியது...
ஆசிரியர் ஒருவரை இழந்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ள விதம்,
மனம் பாரமாகிறது
//

மிஸ் ரொம்ப நல்லவங்க அதான்....

வருகைக்கு நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

asiya omar கூறியது...
இனி சுசீலான்னு பெயரக்கேட்டால் உங்க சுசீலா மிஸ் நினைவு வரும்படி பகிர்வு மனதை தொட்டது.//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில நினைவுகள் தேய்வதில்லை;சில ரணங்கள் ஆறுவதில்லை;சில சோகங்கள் மறைவதில்லை.
' gods love those who die young’ என்று சொல்வார்கள்.அதுவே ஒரு ஆறுதல்.வேறென்ன சொல்ல?//

உணர்வை பகிர்ந்துகொண்டமைக்கு என் வணக்கம் அய்யா.

சி.கருணாகரசு சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மரணம் பிரித்த ஆசிரியைக்கு காலம் கடந்தும் உங்கள் மனதை விட்டுப் பிரிக்க முடிய வில்லையே!!//

முடியாதுங்க... மிஸ் அப்படிபட்டவங்க....
தங்களின் வருகைக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

sakthistudycentre-கருன் கூறியது...
புதுப் பதிவு எப்ப சார்..//

கொஞ்சம் இடைவேளை விட்டு தான் பதி போடணும் அய்யா... அப்பதான் நம்ம பதிவு நிறைய நபர்களை சேரும்.... அதற்குள் நாமும் மற்றவங்க படைப்பை படிக்க அவகாசம் கிடைக்கும்....
மாதத்திற்கு 4 அல்லது 5 தான் பதிவெற்றனும் என்று எண்ணியுள்ளேன்.

நீங்களே ஆவலாக கேட்குறிங்க ...
நாளை வருகிறது புதிய பதிவு காணொளியாக..... கண்டு களியுங்கள்.

சி.கருணாகரசு சொன்னது…

Part Time Jobs கூறியது...
Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com//

தகவல் புரியல... (ஆங்கிலம் தெரியாதுங்க) ஏதோ வேலை விடயம் போல... மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ்மணி கூறியது...
இதயத்தை கனமாக்கி விட்டிர்கள் நட்பு.....//

தமிழ்மணி அவர்களுக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

சே.குமார் கூறியது...
மிக நெகிழ்வான பகிர்வு.//

மிக்க நன்றிங்க குமார்

மணிமேகலா சொன்னது…

மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள் அந்த ஆசிரியைக்கு.

ஒரு மாணவனாய் உங்கள் அன்பு நெகிழ்ச்சியானது.

அவர் வாழ்ந்திருக்கலாம்!

சி.கருணாகரசு சொன்னது…

மணிமேகலா கூறியது...
மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள் அந்த ஆசிரியைக்கு.

ஒரு மாணவனாய் உங்கள் அன்பு நெகிழ்ச்சியானது.

அவர் வாழ்ந்திருக்கலாம்!//

உங்க அஞ்சலிக்கும் உணர்வுக்கும் நன்றிங்க.

மதுமதி சொன்னது…

இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.html

Related Posts with Thumbnails