செப்டம்பர் 15, 2010

எங்கள் உலகம்! (எந்த பெயர் சூட்டலாம்? )

வணக்கம்....

செப்டம்பர் 15 .... எங்கள் வாரிசின் வருகைக்கென... மருத்துவர் குறித்த தேதி.
செப்டம்பர் 12... நாங்கள் பெற்றோரான நாள்.
எங்கள்...
அன்பணுக்களின் கலகம்!
அதில் வந்த...
இவனே...
இனியெங்கள் உலகம்!!


உலகுக்கு இவன்
புது வரவு!_எங்கள்
உயிருக்கு இவனே
முதல் உறவு!!ஈர...
தொப்பூழ் கொடியுடன்
உன்னை ஏந்திய தருணம்
ஏனோ கண்ணீர் கசிந்தது!


எனக்குள் இருந்த
எல்லாத் துயரும்
அந்த நொடியில் நசிந்தது!!
பாலினம்... ஆண்

எடை .... 3.600 கிலோ
பிறப்பு வகை.... இயல்பு வகை... (அதாவது ஆயுதமின்றி)
                                   

என்ன பெயர் சூட்டலாம்?
இருபாலினத்திலும்... பெயர்களை தெரிவு செய்து வைத்திருந்தோம்.
குழந்தை பிறந்த இரண்டாம் நாளிலிருந்து பெயருக்கான ஓட்டெடுப்பு நடைபெறுகிறது
இந்த எழுத்தில் இப்படிதான் இருக்க வேண்டும் எந்த வரையறையும் வகுத்துக்கொள்ள விருப்பவில்லை
பெயர் நல்ல தமிழ் பெயராக சுருக்கமாக இருக்கனும். எளிமையா இருக்கனும்....
ஆகையால் கீழே உள்ள 4 பெயர்களில் உங்களுக்கு பிடித்த ஒரு பெயரை தேர்வுசெய்யுங்கள்... எந்த பெயர் அதிக ஓட்டு பெருகிறதோ... அந்த பெயரைதான் சூட்டுவோம்.1.இளங்கதிர்


2.நாவலன்


3.முகிலன்


4.செழியன்.

எங்கள் பகுதியில் குழந்தையை பார்க்க வரும் உறவினரும் நண்பர்களும் குழந்தையின் கையில் பணம் வைத்துதான் தூக்குவார்கள்....(இது சடங்காம்?) அதில் எனக்கு உடன்பாடில்லாததால்..... இப்படி எழுதி மருத்துவமனையிலும்.... தற்போது வீட்டிலும் வைத்திருக்கிறேன்....இது எனக்கு பல சங்கடங்களையும்.... எதிர் விவாதங்களையும்... வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் பணம் வாங்க மறுத்து விட்டோம்
அன்புடன்... நாங்கள்.


க. சிவரஞ்சினி.


சி. கருணாகரசு.  (தற்காலிக தொடர்புக்கு..... 7502827721)

55 கருத்துகள்:

எல் கே சொன்னது…

vaalthukkal cheziyan nalla irukku

தமிழ் உதயம் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி.

தமிழ் அமுதன் சொன்னது…

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...!

மீண்டும் வருகிறேன்..!

priyamudanprabu சொன்னது…

வாழ்த்துக்கள்...!

3. செழியன். IS NICE

elamthenral சொன்னது…

வாழ்த்துக்கள்... நல்ல ஆரேக்கியத்துடன் 100 ஆண்டு காலம் வாழ ஆண்டவனிடம் பிராத்தனை செய்துக்கொள்கிறேன்..

ஹேமா சொன்னது…

கனவொன்று கண்முன் காட்சியாய் இருக்கும்போது வார்த்தைகள் இல்லை அரசு.அவ்வளவு சந்தோஷமாய் உணர்கிறேன்.

வாழ்த்துகள் வாழ்த்துகள்...
செல்லக்குட்டி செழியனுக்கு.

அம்மாவுக்கும் அன்பு வாழ்த்துகள்.

அகல்விளக்கு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள் அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா...

rvelkannan சொன்னது…

தோழரே வாழ்த்துகள் ,
சகோதரிக்கும் எனது மருமகனுக்கும் அன்பை சொல்லுங்கள்.
எனது தேர்வு
இளங்கதிர் or செழியன்.

விஜய் சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

இளங்கதிரோன் நன்றாக உள்ளதா ?

விஜய்

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள் கருணாகரசு. குழந்தைக்கு எங்கள் ஆசியும். பெயர் அழகென்பதோடு யதார்த்தமும் கருதினால் இளங்கதிர் தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில வரிசைப்படி நான்கு பெயர்களில் இதுவே முதலில் வரும். காத்திருக்கும் நேரம் குறையுமே:)).

கோவி.கண்ணன் சொன்னது…

எம்பையன் பேரு செங்கதிர்.

இளங்கதிர் தான் என் பரிந்துரை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

பெற்றோருக்கும் புதியவருக்கும் நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

எந்தப் பெயர் சூட்டினாலும் மகன் பெயரில் உங்கள் பெயர் மற்றும் மனைவி பெயரின் ஆங்கில முதலெழுத்தைச் (இனிசியல்) சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் அண்ணா.

பெயரில்லா சொன்னது…

இளஞ்சிவப்பு ரோஜாவாய் இளவல் இளங்கதிர்...இந்த பேரழகனை ஈன்ற பெருமிதம் உங்கள் எழுத்துக்கள் அழகாய் பறைசாற்றுகிறது..வாழ்த்துக்கள் கருணா...

இராகவன் நைஜிரியா சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே.

முகிலன் என்ற பெயருக்கு எனோட ஓட்டுக்கள்.

அமைதி அப்பா சொன்னது…

நல் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஓட்டு

'இளங்கதிர்'-க்கு.

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ!! செழியன் என்ற பெயர் நன்றகாயிருக்கு...

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே.
கொடுக்கப்பட்டப் பெயர்களில் எனக்கு பிடித்தது "முகிலன்" .
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

முகிலன்

Unknown சொன்னது…

S.K.இளங்கதிர்...
S.K.ILANKATHIR

SKI...ஆகாயம்...

ஜோதிஜி சொன்னது…

இளங்கதிர் சிறப்பு. வாழ்த்துகள்.

தமிழ்பெயர் சூட்டும் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவியர் இல்லத்தின் மொத்த வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் சொன்னது…

வாழ்த்துக்கள்...!

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!!

க.பாலாசி சொன்னது…

சந்தோஷங்க... வாழ்த்துக்களும்...

சத்ரியன் சொன்னது…

பெற்றோருக்கு வாழ்த்துக்களும், மருமகனுக்கு நல்வரவும்..!

இளங்கதிர்.

Chitra சொன்னது…

வாழ்த்துக்கள்! படங்கள் அருமை..... முதல் படம், அபாரம்!

நிலாமதி சொன்னது…

பெற்றோருக்கு வாழ்த்துக்கள் முகிலன் எனது தெரிவு. மாதுளன் எனும் அழகான் பெயரும் வைக்கலாம் விரும்பினால்.

Mahi_Granny சொன்னது…

வாழ்த்துக்கள் உங்களுக்கு.. எல்லா நலன்களும் பெற்று வாழ குழந்தைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

சுந்தரா சொன்னது…

பெற்றோருக்கும், பிறந்த
புதுக் கதிருக்கும் வாழ்த்துக்கள்!

velji சொன்னது…

C O N G R A T S!

my vote for ILANGKATHIR!

சீமான்கனி சொன்னது…

ரெம்ப சந்தோசம் கருணா அண்ணா சின்னவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் எனக்கு இளங்கதிர் பிடிச்சிருக்கு....

அரசூரான் சொன்னது…

அம்மாவிற்க்கும் அப்பாவிற்க்கும் வாழ்த்துக்கள்.
இளங்கதிர் - நல்லா இருக்கு.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப சந்தோசமா இருக்கு கருணா.

வாழ்துகளுக்குள் வந்து விடுமா, என் துடிப்புன்னு தெரியல.

சரி கருணா, சந்தோசம். அன்பும்!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துகள் எனக்கு இளங்கதிர் பிடிச்சிருக்கு....

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!!
"முகிலன்" பெயர் என்னுடைய தெரிவு.

சின்னபாரதி சொன்னது…

பங்காளிக்கு வாழ்த்து(க்)கள்... இளங்கதிர் வீசட்டும் செழித்தோங்கி ...


உங்களோட தாங்கும் கை சிறக்க வாழ்த்து(க்)கள் ...

ராமலக்ஷ்மி சொன்னது…

என் அன்பான வாழ்த்துக்கள்.

இளங்கதிர் எனக்கு உடன் பிடித்தது.

முதல் படம் ஒரு அழகான கவிதை.

நட்புடன் ஜமால் சொன்னது…

கொடுக்கப்பட்டவைகளில் மட்டுமென்றால்

இளங்கதிர்
செழியன்

இந்த வரிசையில் எதுவாகில் அழகே

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் நண்பா,.... மிக்க மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நான்கு பெயர்களும் நல்லாயிருக்கு.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துகள் வாழ்த்துகள்...
செல்லக்குட்டிக்கு.


முகிலன் என்ற பெயருக்கு ஓட்டு.

Expectant father சொன்னது…

Congrats to the baby and parents.

First choice Mugilan, second choice Ilankathir.

அரங்கப்பெருமாள் சொன்னது…

வாழ்த்துக்கள்...!

என்னுடைய ஓட்டு:செழியன்

விக்னேஷ்வரி சொன்னது…

வாழ்த்துகள். வித்தியாச அணுகுமுறையாயிருக்கிறது உங்களது.

Sen22 சொன்னது…

Navalan... Nallairukku....


My vote is : Navalan...

Lalithasundar சொன்னது…

உங்களுக்கும்(மனைவி) , குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்
இளங்கதிர் அழகாக இருக்கிறது.


இப்படிக்கு
உங்கள் தோழி
லலிதாசுந்தர்

Valar (வளர்மதி) சொன்னது…

வாழ்த்துக்கள்...
இல்லமெங்கும் ஆனந்த மழை
பொங்கட்டும்.
முகிலன் என்ற பெயருக்கு எனோட ஓட்டுக்கள்.

ஜெய்லானி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

ஸ்ரீராம். சொன்னது…

பெற்றோருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
முகிலன் நன்றாக இருக்கிறது. இந்நேரம் தெரிவு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புகைப்படம் அழகு

thiyaa சொன்னது…

அருமை
வாழ்த்துக்கள்...!

arasan சொன்னது…

வாழ்த்துக்கள்.... மாமா
நேரில் பார்க்க இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும்...
இப்போது இணையத்தின் வாயிலாக பார்த்துக்கொண்டேன்..
மிக்க மகிழ்ச்சி...

எனது விருப்பம் - "இளங்கதிர்"

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

முகிலன் அழகான பெயர் என தோன்றுகிறது

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மகிழ்ச்சி நண்பா

வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசேகரன்

Related Posts with Thumbnails