ஜூன் 18, 2010

பாறை உடைக்கும் பனிப் பூக்கள்

தங்கமே எனச் சொல்லி
தாலாட்ட எவருமில்லை
செல்லமே எனச் சொல்லி
சீராட்ட ஆளுமில்லை .

ஆசையாய் பொம்மைக்கேட்டு
அடம் பிடித்து அழவில்லை
பசி வந்து எனைவாட்ட
பால் கேட்டு அழுகின்றேன்

பச்சிளம் குழந்தை என்றா
பசி விலகி ஓடிவிடும் ?
வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும் .

விண்முட்டும் விஞ்ஞானம்
வீதியெல்லாம் நடத்துறாங்க
விதியோட போராடும் _என்மை
வேடிக்கை பாக்குறாங்க .

கல்வியை தரச்சொல்லி
கால்பிடித்து நிக்கலிங்க
கால் வயிற்றை ஈரமாக்கி _எம்
கண்ணீரை நிறுத்திடுங்க .

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

கருவறைக்குள்ளேயே ... நான்
கரைந்து போயிருந்தால் ,
கஷ்டமும் உனக்கில்லை
கண்ணீரும் எனக்கில்லை .

பனிப் பூ கைப்பட்டு
பாறையது உடைகிறதே _ இதை
பார்க்கின்ற மனிதகுலம்
பாறைப்போல் கிடக்கிறதே !

( ஆறு ஆண்டுகளுக்கு முன்... சிங்கப்பூர் கவிச்சோலையில் இந்த படத்திற்கு கவிதை போட்டி நடைப்பெற்றது .... அப்போது நான் எழுதிய கவிதை இது .... பரிசு பெற வில்லை )

51 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

பச்சிளம் குழந்தை என்றா
பசி விலகி ஓடிவிடும் ?
வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும்]]

வலியின் உச்சம் :(

விண்முட்டும் விஞ்ஞானம்
வீதியெல்லாம் நடத்துறாங்க
விதியோட போராடும் _என்மை
வேடிக்கை பாக்குறாங்க .]]

இது நமக்கு சவுக்கடி

அன்புடன் நான் சொன்னது…

மிக்க நன்றி நன்றி நன்றி

அன்புடன் நான் சொன்னது…

கருத்துரை எழுதுவதில் இருந்த பிரச்சனைக்கு வருந்துகிறேன்....

பிரச்சனையை தீர்த்து வைத்த நட்புடன் ஜமால்_க்கு நன்றிகள்.

அண்ணாமலை..!! சொன்னது…

ஒரு அருமையான
சமுதாயக் கவிதை நண்பரே!

அன்புடன் நான் சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

ஒரு அருமையான
சமுதாயக் கவிதை நண்பரே!//
மிக்க நன்றிங்க.

விஜய் சொன்னது…

மனம் வலிக்கும் படமும் கருத்தும்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

சுப்பு சொன்னது…

அருமையான உங்களது வரிகளுக்கு எனது இந்த வரிகள் காணிக்கை.

கடவுளும் ஒரு போலி மருத்துவன் தான்
ஏழ்மை என்ற தடுப்பூசியால்
எங்கள் உள்ளத்தை ஊமையாக்கிய கயவன்.

அன்புடன் நான் சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

ஒரு அருமையான
சமுதாயக் கவிதை நண்பரே!//

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சுப்பு கூறியது...

அருமையான உங்களது வரிகளுக்கு எனது இந்த வரிகள் காணிக்கை.

கடவுளும் ஒரு போலி மருத்துவன் தான்
ஏழ்மை என்ற தடுப்பூசியால்
எங்கள் உள்ளத்தை ஊமையாக்கிய கயவன்.//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...

மனம் வலிக்கும் படமும் கருத்தும்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//
வருகைக்கு மிக்க நன்றிங்க விஜய்.

Revathyrkrishnan சொன்னது…

Nalla karuthai pathivu seikirathu kavithai

ராஜவம்சம் சொன்னது…

வரிகல் ஒவ்வொன்றும் வலிகிறது.

கமலேஷ் சொன்னது…

கல்லுடைக்கும் பூக்கள்...
ரொம்ப நல்ல கவிதை தோழரே..
வாழ்த்துக்கள்..

அன்புடன் நான் சொன்னது…

reena கூறியது...

Nalla karuthai pathivu seikirathu kavithai//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வரிகல் ஒவ்வொன்றும் வலிகிறது.//

கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...

கல்லுடைக்கும் பூக்கள்...
ரொம்ப நல்ல கவிதை தோழரே..
வாழ்த்துக்கள்..//
தங்களின் வருகைக்கு நன்றிங்க.

Asiya Omar சொன்னது…

அருமையான கவிதை.தொடர்ந்து உங்கள் கவிதைகளை வெளியிடுங்க.

அன்புடன் நான் சொன்னது…

asiya omar கூறியது...

அருமையான கவிதை.தொடர்ந்து உங்கள் கவிதைகளை வெளியிடுங்க.//

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

ஜெயந்தி சொன்னது…

படமும் கவிதையும் அப்படியே மனசை வலிக்கச் செய்கிறது.

யுக கோபிகா சொன்னது…

//வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும் .//

நடந்தால் நன்றாக இருக்கும் ...

அன்புடன் நான் சொன்னது…

ஜெயந்தி கூறியது...

படமும் கவிதையும் அப்படியே மனசை வலிக்கச் செய்கிறது.//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

யுக கோபிகா கூறியது...

//வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும் .//

நடந்தால் நன்றாக இருக்கும் ...//

தங்களின் வருகைக்கு நன்றிங்க.

விஜய் சொன்னது…

உலகத்தின் எங்கோ நடக்கும் தவறை கண்டு கொதித்தெழுந்தால் நீயும் நானும் தோழர்களே...

அன்புடன் நான் சொன்னது…

vijay கூறியது...

உலகத்தின் எங்கோ நடக்கும் தவறை கண்டு கொதித்தெழுந்தால் நீயும் நானும் தோழர்களே...//

வருகைக்கு மிக்க நன்றி தோழரே!

ஹேமா சொன்னது…

அரசு...நீங்க பதிவில போட்ட அண்ணைக்கே வந்திருந்தேன்.
பின்னூட்டம் தர முடில.

படமே கவிதையா
மனசைக் கலக்குது.
இதுக்கு மேலயும்
உங்க வரிகள் ....!

ராமலக்ஷ்மி சொன்னது…

படமும் தொடரும் முதல் நான்கு வரிகளுமே மனதை உடைத்து விட்டன.

அன்புடன் மலிக்கா சொன்னது…

//பனிப் பூ கைப்பட்டு
பாறையது உடைகிறதே _ இதை
பார்க்கின்ற மனிதகுலம்
பாறைப்போல் கிடக்கிறதே //

மனம் கனக்கிறது. பரிசுகிடைக்கலைன்னா என்னா கவிதையே ஒரு பரிசுதான் சூப்பர் வாழ்த்துக்கள்..

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

அரசு...நீங்க பதிவில போட்ட அண்ணைக்கே வந்திருந்தேன்.
பின்னூட்டம் தர முடில.

படமே கவிதையா
மனசைக் கலக்குது.
இதுக்கு மேலயும்
உங்க வரிகள் ....!//

என்னேட தளத்தில் ஏதே தவறு நடந்து விட்டது.... என்னால சிரிசெய்ய முடியல.... நட்புடன் ஜமால் தான் சரிசெய்தார்.

மீள்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...

படமும் தொடரும் முதல் நான்கு வரிகளுமே மனதை உடைத்து விட்டன.//

தங்களின் மீள் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

//பனிப் பூ கைப்பட்டு
பாறையது உடைகிறதே _ இதை
பார்க்கின்ற மனிதகுலம்
பாறைப்போல் கிடக்கிறதே //

மனம் கனக்கிறது. பரிசுகிடைக்கலைன்னா என்னா கவிதையே ஒரு பரிசுதான் சூப்பர் வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

elamthenral சொன்னது…

excellent poem.. really these lines are touching my heart sir.... so cute.. all the best sir..

அன்புடன் நான் சொன்னது…

புஷ்பா கூறியது...

excellent poem.. really these lines are touching my heart sir.... so cute.. all the best sir..//

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

rvelkannan சொன்னது…

பரிசு எதற்கு தோழர் இப்பொழுது கிடைத்த பாராட்டுகள் போதாதா ..
கவிதை அருமை என்று சொல்ல மனம் வரவில்லை வேதனையுடன் வலியை பகிர்ந்து கொண்டது போல் உள்ளது உங்களின் வரிகளில்

கோமதி அரசு சொன்னது…

படமும்,கவிதையும் இதய பாறையை

உடைத்து விட்டது.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...

பரிசு எதற்கு தோழர் இப்பொழுது கிடைத்த பாராட்டுகள் போதாதா ..
கவிதை அருமை என்று சொல்ல மனம் வரவில்லை வேதனையுடன் வலியை பகிர்ந்து கொண்டது போல் உள்ளது உங்களின் வரிகளில்//

தோழர்களின் பாராட்டை விட பரிசு பெரிதில்லைதான்....

வருகைக்கு நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

கோமதி அரசு கூறியது...

படமும்,கவிதையும் இதய பாறையை

உடைத்து விட்டது.//

உங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க ... கோமதி அரசு.

goma சொன்னது…

ஒவ்வொரு வரியும் நல்ல பிரம்படி

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் மனத்தை உடைத்து விட்டன கவிதை வரிகள்.. கருணாகரசு

அன்புடன் நான் சொன்னது…

goma கூறியது...

ஒவ்வொரு வரியும் நல்ல பிரம்படி//

கருத்துக்கு நன்றிங்க.

க.பாலாசி சொன்னது…

எவ்வளவு கொடுமை பாருங்கள்.. படத்தை பார்த்தவுடனே பாதி நொறுங்கிவிட்டேன்.. மீதம் கவிதையில்...

பெயரில்லா சொன்னது…

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

உணர்வுபூர்வமான வரிகள்!

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...

உண்மைதான் மனத்தை உடைத்து விட்டன கவிதை வரிகள்.. கருணாகரசு//

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...

எவ்வளவு கொடுமை பாருங்கள்.. படத்தை பார்த்தவுடனே பாதி நொறுங்கிவிட்டேன்.. மீதம் கவிதையில்...//

கருத்துக்கு நன்றி பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

OpenID nihilan கூறியது...

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

உணர்வுபூர்வமான வரிகள்!// வருகைக்கு மிக்க நன்றிங்க.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

கவிதை செவுட்டடி...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பார்க்கும்போதே கண்ல தண்ணீர் முட்டுகிறதே சார்...

அன்புடன் நான் சொன்னது…

OpenID nihilan கூறியது...

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

உணர்வுபூர்வமான வரிகள்!// வருகைக்கு மிக்க நன்றிங்க.

25 ஜூன், 2010 9:23 am
பிளாகர் ப்ரியமுடன்...வசந்த் கூறியது...

பார்க்கும்போதே கண்ல தண்ணீர் முட்டுகிறதே சார்...

25 ஜூன், 2010 9:29 pm
பிளாகர் ப்ரியமுடன்...வசந்த் கூறியது...

கவிதை செவுட்டடி...//
கருத்துக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

//ஆசையாய் பொம்மைக்கேட்டு
அடம் பிடித்து அழவில்லை
பசி வந்து எனைவாட்ட
பால் கேட்டு அழுகின்றேன்//

அருமை....அருமை.

arasan சொன்னது…

மிக எளிதான வரிகளில் பனி பூக்களின் வலியை சொல்லி உள்ளீர்கள்...
உங்கள் விலாசமான சமுதாய பார்வை இக்கவி வரிகளில் தெறிக்கிறது...

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

கலங்கிடச்செய்யும் படமிது

வரிகளில் அனலிருக்கிறது பற்றுமா உள்ளங்களை.....

வாழ்த்துகள்

உங்கள் அனுமதியுடன் இந்தப்படத்துக்காக எனது வரிகளையும் சமர்ப்பிக்கிறேன் விரையவில்
அனுமதியை எனக்கு அறிவிப்பீர்களா...தோழரே...

அன்புடன் நான் சொன்னது…

நேசமுடன் ஹாசிம் கூறியது...
கலங்கிடச்செய்யும் படமிது

வரிகளில் அனலிருக்கிறது பற்றுமா உள்ளங்களை.....

வாழ்த்துகள்

உங்கள் அனுமதியுடன் இந்தப்படத்துக்காக எனது வரிகளையும் சமர்ப்பிக்கிறேன் விரையவில்
அனுமதியை எனக்கு அறிவிப்பீர்களா...தோழரே...//

மிக்க நன்றிங்க தோழரே...
படம் என்னுடையதில்லைங்க .
நீங்க தாராளமா எழுதலாம்.... இந்த கவிதையைவிட மிக சிறப்பாக எழுத என் வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails