செல்லமே...!
எனக்கும் உனக்கும்
உடன்பாடு ஏதுமின்றியே ...
உற்ற துணையானோம் .
*
*
*
உனக்கு என் மீதும்
எனக்கு உன் மீதும்
ஏற்பட்ட பிடிப்பிற்கு
அன்பே ஆதாரம்.
*
*
என் முகம் காண
நீ மகிழ்வாய்
என் அரவணைப்பில்
நீ நெகிழ்வாய் ,
உன்னை ...
வாரியணைத்து
வாஞ்சையோடு கொஞ்சுவது
வழக்கம் எனக்கு .
*
*
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
உன் வாடிக்கை ,
உன் அருகாமையையும்
உன் தொடுதலையும்
விரும்புவது ... என் வாடிக்கை .
*
*
காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா ?
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
(நான்கு ஆண்டுகள் முன்... என்மீது அன்போடு இருந்த நாய்க்குட்டியை பிரிந்து வெளிநாடு வந்த போது எழுதிய கவிதை .
இன்று அந்த குட்டி இல்லை ... ஆகையால் இந்த கவிதை என் நாய்க்குட்டிக்கு .... காணிக்கை . உண்மை படம் கிடைக்கவில்லை )
Tweet |
69 கருத்துகள்:
உங்கள் அன்பு நெகிழ வைக்கின்றது
வரிகளில் பல விடயங்கள் ...
கவிதை அழகு
அன்பு அதை விட சிறப்பு
‘உயிர்களிடத்து அன்பு செய்’
செய்திருக்கிறீர்கள்.
அருமைங்க.
:)
செல்லப்பிராணியின் பிரிவு தெரிகிறது.
அந்த நாலுகால் செல்லத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்தமாதிரி இந்த கவிதைங்க... அருமை....
//காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா?//
நெகிழச்செய்துவிட்டது உங்கள் அன்பு...
உண்ர முடிகிறது நண்பரே.நானும் என் செல்லத்திற்காக இப்படி மனதுக்குள்ளாகவே கவிதை எழுதியிருக்கேன்.
அன்பிற்கும் பாசத்திற்கும் ஆறாம் அறிவு தேவையில்லை.
அருமை..!அருமை...!
கருணாகரசு...
ஆறறிவையும் தாண்டி ஏழாவதும்
இருக்கின்றது என்பதைப் காட்டிருக்கிறீர்கள்
உங்கள் அன்பினால்...அனைத்தும்
மதிக்கப்பட வேண்டும் என்பதை!!
பரிந்து வந்த வரிகள் அருமை நன்றி.
அரசு...அன்பு வைப்பது யாராயிருந்தாலென்ன எதுவாயிருந்தாலென்ன.நான் வளர்த்து விட்டு வந்த என் தம்பி என்றழைக்கும் என் வீட்டுச் செல்லமும் போன வருடம் இறந்துவிட்டான்.இந்தமுறை நான் வீடு போனால் என்னை வரவேற்க அவன் இல்லை.
ஞாபகப்படுதிவிட்டீர்கள்.நன்றி அரசு.
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
மேற்கூரிய இரண்டையும் அன்பைத்தவிர எதையும் எதிர்பார்க்காமல்,
சலிக்காது,சளைக்காது ,
செய்பவர்கள்,உலகத்தில் இரண்டே பேர்தான்.....
-நம்மைப் பெற்ற தாய்
அடுத்து
-நாம் வளர்க்கும் நாய்
அருமை கருணரசு மிக கருணை உள்ளவர் நீங்கள்
நட்புடன் ஜமால் கூறியது...
உங்கள் அன்பு நெகிழ வைக்கின்றது
வரிகளில் பல விடயங்கள் ...//
தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜமால்.
நினைவுகளுடன் -நிகே- கூறியது...
கவிதை அழகு
அன்பு அதை விட சிறப்பு//
கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க நிகே.
ராமலக்ஷ்மி கூறியது...
‘உயிர்களிடத்து அன்பு செய்’
செய்திருக்கிறீர்கள்.
அருமைங்க.//
மிக்க நன்றிங்க.... நீங்க புகைப்பட கலை கற்றவரா?
D.R.Ashok கூறியது...
:)//
மிக்க மகிழ்ச்சிங்க அசோக்.
சைவகொத்துப்பரோட்டா கூறியது...
செல்லப்பிராணியின் பிரிவு தெரிகிறது.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.....
க.பாலாசி கூறியது...
அந்த நாலுகால் செல்லத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்தமாதிரி இந்த கவிதைங்க... அருமை....//
பாலாசியின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
அகல்விளக்கு கூறியது...
//காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா?//
நெகிழச்செய்துவிட்டது உங்கள் அன்பு...//
நெகிழ்ச்சிக்கு மிக்க நன்றிங்க அகல் விளக்கு.
கண்மணி/kanmani கூறியது...
உண்ர முடிகிறது நண்பரே.நானும் என் செல்லத்திற்காக இப்படி மனதுக்குள்ளாகவே கவிதை எழுதியிருக்கேன்.
அன்பிற்கும் பாசத்திற்கும் ஆறாம் அறிவு தேவையில்லை.//
சரியாக சொன்னிங்க கண்மணி.... வருகைக்கு மிக்க நன்றிங்க.
ஜீவன்(தமிழ் அமுதன் ) கூறியது...
அருமை..!அருமை...!//
நன்றி...நன்றி.. என்ன ஜீவனில் தமிழமுதம் சேர்ந்திருக்கிறது.... அதுவும் நல்லாத்தான் இருக்கிறது.
கலா கூறியது...
கருணாகரசு...
ஆறறிவையும் தாண்டி ஏழாவதும்
இருக்கின்றது என்பதைப் காட்டிருக்கிறீர்கள்
உங்கள் அன்பினால்...அனைத்தும்
மதிக்கப்பட வேண்டும் என்பதை!!
பரிந்து வந்த வரிகள் அருமை நன்றி.//
தங்களின் மேலான வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க (தொலைபேசியில் என் இல்லத்தரசியிடம் நலம் விசாரித்தற்கும் நன்றி....உங்களின் உண்மை அன்பை என் இல்லத்தரசியும் என்னுடன் பகிர்ந்துக் கொண்டாள்)
//நீங்க புகைப்பட கலை கற்றவரா? //
இல்லைங்க. ஆர்வலர். அவ்வளவே.
விரட்ட விரட்ட விலகாது ஒட்டி வரும் அன்பிற்ககாகதான் எனது வலைப்பூவிற்கு நாய்க்குட்டி மனசு என்று பெயர் வைத்தேன்.
கருத்துரை பகுதி கொஞ்சம் ஓவர்லாப் ஆகுது சரி செய்யுங்கள்.
ஹேமா கூறியது...
அரசு...அன்பு வைப்பது யாராயிருந்தாலென்ன எதுவாயிருந்தாலென்ன.நான் வளர்த்து விட்டு வந்த என் தம்பி என்றழைக்கும் என் வீட்டுச் செல்லமும் போன வருடம் இறந்துவிட்டான்.இந்தமுறை நான் வீடு போனால் என்னை வரவேற்க அவன் இல்லை.
ஞாபகப்படுதிவிட்டீர்கள்.நன்றி அரசு.//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஹேமா.
goma கூறியது...
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
மேற்கூரிய இரண்டையும் அன்பைத்தவிர எதையும் எதிர்பார்க்காமல்,
சலிக்காது,சளைக்காது ,
செய்பவர்கள்,உலகத்தில் இரண்டே பேர்தான்.....
-நம்மைப் பெற்ற தாய்
அடுத்து
-நாம் வளர்க்கும் நாய்//
நல்லாச் சொன்னிங்க.... வருகைக்கு நன்றிங்க.
thenammailakshmanan கூறியது...
அருமை கருணரசு மிக கருணை உள்ளவர் நீங்கள்//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
ராமலக்ஷ்மி கூறியது...
//நீங்க புகைப்பட கலை கற்றவரா? //
இல்லைங்க. ஆர்வலர். அவ்வளவே.//
தாங்கள் எடுத்த புகைப்படங்களை பார்க்கும் போது அதற்கென படித்தவரென நினைத்தேன்... படங்கள் மிக மிக நேர்த்தி இது உண்மை.
நாய்க்குட்டி மனசு கூறியது...
விரட்ட விரட்ட விலகாது ஒட்டி வரும் அன்பிற்ககாகதான் எனது வலைப்பூவிற்கு நாய்க்குட்டி மனசு என்று பெயர் வைத்தேன்.
கருத்துரை பகுதி கொஞ்சம் ஓவர்லாப் ஆகுது சரி செய்யுங்கள்.//
நல்ல மனசுங்க உங்களுக்கு.... தளத்தின் பெயரையே நாய்க்குட்டி மனசுன்னு வச்சிருக்கிஙளே.... கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க....
கருத்துரைப்பகுதியை சரிசெய்கிறேன் நன்றி.
நம் உறவு நம் சொந்தம் என்ற பந்தத்தை தரும் வலிமை வாய்ந்தவை இந்த வளர்பு பிராணிகள்...
அதை அழகாய் நெகிழ்வாய் சொல்லியிருக்கீங்க கருணா....
இந்த ஜீவன்களோடு சின்ன வயதிலிருந்தே எனக்கும் நெருக்கம் அதிகம். உங்கள் அன்பை ரசித்தேன்.
கவிதை மனதை நெகிழ வைக்கிறது...
சுற்றும் பூமியில் எதிர்ப்பார்ப்பு எதுவும் இன்றி வளர்ப்பவரைச் சுற்றும் ஒரே ஜீவன்.... ! செல்லம்ம்ம்ம்ம்ம்...!
தமிழரசி கூறியது...
நம் உறவு நம் சொந்தம் என்ற பந்தத்தை தரும் வலிமை வாய்ந்தவை இந்த வளர்பு பிராணிகள்...
அதை அழகாய் நெகிழ்வாய் சொல்லியிருக்கீங்க கருணா....//
சரியாய் சொன்னிங்க....
நன்றிங்க தமிழ்....
ஸ்ரீராம். கூறியது...
இந்த ஜீவன்களோடு சின்ன வயதிலிருந்தே எனக்கும் நெருக்கம் அதிகம். உங்கள் அன்பை ரசித்தேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.
வசந்தி கூறியது...
கவிதை மனதை நெகிழ வைக்கிறது...//
வருகைக்கு நன்றி வசந்தி.....
அண்ணன் சத்திரியன் தங்கை வசந்தியை நலம் விசாரித்தார்.
சத்ரியன் கூறியது...
சுற்றும் பூமியில் எதிர்ப்பார்ப்பு எதுவும் இன்றி வளர்ப்பவரைச் சுற்றும் ஒரே ஜீவன்.... ! செல்லம்ம்ம்ம்ம்ம்...!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிச்செல்ல்ல்ல்லம்.
செல்வத்திற்காக பலரும் செல்லங்களை பிரிந்தும்,இழந்தும் இருக்கிறோம். :((
துபாய் ராஜா கூறியது...
செல்வத்திற்காக பலரும் செல்லங்களை பிரிந்தும்,இழந்தும் இருக்கிறோம். :((//
மிகத்தெளிவா சொன்னிங்க துபாய் ராசா.
வருகைக்கு நன்றி.
நானும் சத்ரியன் அண்ணனை கேட்டதாக சொல்லவும்.... அப்பரம் அண்ணன் சத்ரியன் போட்டோ உங்க போட்டோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
வசந்தி கூறியது...
நானும் சத்ரியன் அண்ணனை கேட்டதாக சொல்லவும்.... அப்பரம் அண்ணன் சத்ரியன் போட்டோ உங்க போட்டோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.//
மகிழ்ச்சி... வசந்தி.
இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான் congrats Karunarasu
/// thenammailakshmanan கூறியது....
சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான் congrats Karunarasu///
மிக்க நன்றிங்க.
மிக அழகான அன்பு வரிகள்...
அன்புடன் மலிக்கா கூறியது...
மிக அழகான அன்பு வரிகள்...//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
நல்லா இருக்கு
நசரேயன் கூறியது...
நல்லா இருக்கு//
மிக்க நன்றிங்க.
அழகான வரிகள் ஆழமான வலி
நன்றி கருணாகரசு
ஜேகே
இன்றைய கவிதை கூறியது...
அழகான வரிகள் ஆழமான வலி
நன்றி கருணாகரசு
ஜேகே//
மிக்க நன்றிங்க... ஜேகே.
உயிர் எதுவாய் இருந்தால் என்ன
அனைத்தும் அன்பிற்க்குரியதே
வாழ்த்துக்கள் அரசு
விஜய்
விஜய் கூறியது...
உயிர் எதுவாய் இருந்தால் என்ன
அனைத்தும் அன்பிற்க்குரியதே
வாழ்த்துக்கள் அரசு
விஜய்//
வருகைக்கும்.... கருத்துக்கும் மிக்க நன்றிங்க விஜய்.
செல்லப்பிராணியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போதே எளிதாய் புரிந்துவிடுகிறது...
மனிதர்கள் மீது நீங்கள் செலுத்தும் அன்பின் அளவு என்னவாக இருக்கும் என்பது...
கவிதை காதலன் கூறியது...
செல்லப்பிராணியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போதே எளிதாய் புரிந்துவிடுகிறது...
மனிதர்கள் மீது நீங்கள் செலுத்தும் அன்பின் அளவு என்னவாக இருக்கும் என்பது...//
உங்க வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க.
என்
நாலுகால் செல்லமே ...!
////
அட போங்கப்பா
நலாயிருக்கு
பிரியமுடன் பிரபு கூறியது...
என்
நாலுகால் செல்லமே ...!
////
அட போங்கப்பா
பிரியமுடன் பிரபு கூறியது...
நலாயிருக்கு////
உங்க வருகைக்கும்.... கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
அருமை.
கடையம் ஆனந்த் கூறியது...
அருமை.//
மிக்க நன்றிங்க.
உனக்கான பெயரை
முன்மொழியும் பொருட்டு
என் இரவுணவை
நிலாவுக்கு சோறூட்டி வந்தேன்.
டைகர், ஸீஸர் போன்ற
வல்லினப் பெயர்களும்
ப்ரெளனி, சுப்பு மெல்லினங்களும்
ஒவ்வாமல்
நானுனக்காக
'வள்ளுவன்' என்ற மெய்யினப்
பெயருரைத்தேன்.
அனைவரும்
அமைதி காக்க நீ மட்டுமே
வள்ளென்று அதை
வழிமொழிந்தாய்.
அன்றிலிருந்து
உனக்கான அந்தரங்கமாய்
தெருவிளக்குகள் பக்கம் நின்று
தம்மடிப்பதை தவிர்த்தவனானேன்.
எதிர்வீட்டு ரோஸி
மிக அழகுதான்.....
இருந்தும் வன்புணர்ச்சி
கண்டிக்கத் தக்கதல்லவா?
(ஏண்டா நீ......)
இதனால்தானே ரோஸி வீட்டு
பிரேமாவின் காதல்
நானிழந்தேன் (உனக்கு எப்படி விளக்க? ம்??)
எல்லாம் சரி..
எனக்காக நீ வாலாட்டுவதும்
ஊர்திரும்பும் என்மேல்
தாய்மண் வாரியிறைப்பதும்..
அது எல்லாஞ் சரிதான்...
அந்தநாய்களோடு சேர்ந்து
சுத்தாதேடா என்று
என் ப்ரிய குடிநண்பர்களைப்
பார்த்து அம்மா அலறும்போது மட்டும்
நீ அவளோடு கூட்டாகி
என் நண்பர்களை நம் வீடு அண்டாமல்
தடுப்பதன் ரகசியம் என்ன?
பாவம்...
தோழர்களுக்கும்
தொடையுண்டல்லவா..???
வார்த்தைகள் அற்ற வேதனை .
உங்கள் அன்பு நெகிழ வைக்கின்றது.
ஜெகநாதன் கூறியது...
......
......
......
//
வருகைக்கும் .... ஒரு கவிதை தருகைக்கும் நன்றிங்க.
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...
வார்த்தைகள் அற்ற வேதனை .
உங்கள் அன்பு நெகிழ வைக்கின்றது.// உங்க வருகைக்கும் கருத்துக்கும்...மிக்க நன்றிங்க.
அருமை.. மிக அருமை..
அந்த செல்லத்தை நானும் பார்த்திருக்கிறேன்...
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
அருமை..!அருமை!!.
இராஜராஜேஸ்வரி கூறியது...
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
அருமை..!அருமை!!.//
மகிழ்ச்சி மிக்க நன்றிங்க.
இப்படி எல்லாம் சொல்ல கவி பாட ஒரு மனசு வேணும் கருணா.
அது ஒரு சிலருக்கே வாய்க்கும்.
அதன் அன்பை உணரக் கிடைத்தவர்கள் பாக்கிய சாலிகள்!!
மணிமேகலா கூறியது...
இப்படி எல்லாம் சொல்ல கவி பாட ஒரு மனசு வேணும் கருணா.
அது ஒரு சிலருக்கே வாய்க்கும்.
அதன் அன்பை உணரக் கிடைத்தவர்கள் பாக்கிய சாலிகள்!!//
இனிய நன்றிகள் உங்களுக்கு.
உங்கள் இழப்பின் வலி புரிகிறது நண்பரே.விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது என் வீட்டு நாலு கால் செல்லங்கள் என்னை பார்க்கும் அந்த ஏக்கமான பார்வை, நான் அங்கு நிற்கும் நாட்களில் என்னை பிரிய மனமில்லாமல் கடைக்கு சென்றால் கூட நான் வரும் வரை வாசலில் காத்திருக்கும் அந்த அன்பு, தொலைபேசியில் என் குரல் கேட்டதும் என்னை தேடி வீடெங்கும் அலையும் என் செல்லங்களை பிரிந்து வாடும் இந்த துயரை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிந்து வெளிநாடு கிளம்பும்போது, அதன் முகத்தை பார்க்க இயலாமல், அது உறங்கும் நேரத்தில் சத்தம் இன்றி கிளம்புவதே வாடிக்கையாகி விட்டது. என்று முடியும் இந்த துயரம்????? அம்மு, ரோமி I Miss You Both...
கருத்துரையிடுக