அக்டோபர் 22, 2009

புகைத்தல் , (வெண்சுருட்டு)

விரலிடுக்கில் ...
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நீ ...
நழுவிக்கொண்டிருக்கிறாய் !

அந்த நாற்றம்
உன்னை ...
நெருங்கும் தூரத்தை
அதிகரிக்கிறது !

அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !

உன் ,
அழகு
ஆற்றல்
இரண்டிற்குமே
எமனகிறது அது !

அது ... நோய்களை
உனக்குள்ளும் நிரப்பும்
உன் வாரிசுக்கும் பரப்பும் !

புத்துணர்ச்சி என்று
புகைத்தால் ...
புற்று உணர்ச்சியாய் வந்து
புதைக்கும் !

ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?



புகைத்தலை நிறுத்த ...
1. நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையும் நிறுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் போதும் .
2. குறிப்பிட்ட நாள் , நேரம் வகுக்காமல் ... உடனடியாக செயல் படுத்துவது .
3. புகைக்கு மாற்றாக எதையும் எண்ணாதிருத்தல் ... நாடாதிருத்தல் .
4. அரைநாள் ... ஒருநாள் ...இரண்டுநாள் என புகைத்தலிலிருந்து விடுபட்ட உணர்வை நிறைவாக உணர்தல் . அந்த நாள் எண்ணிக்கையை
உயர்த்துதல் .
5. மருந்துக் கடையில் "நிக்கோட்டின் ஒட்டு வில்லை " உள்ளது. அதை உடலில் ஒட்டிக்கொண்டால் ... அது புகைக்கும் உணர்வை எற்படுத்தாது உதவும் . புகைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள் ... முடியும் உங்களால் !!!

பின் குறிப்பு :
10 ஆண்டுகளுக்கு முன் புகைக்க பழகி ... ஒரே நாளில் 20 முதல் 25 வரை புகைத்த நான் கடந்த 2007 இல் (13-11-2007) புகைப்பதை கைவிட்டு ... எதோ சாதித்த உணர்வோடு மகிழ்வுடன் இருக்கிறேன் . (வலியுறுத்திய இல்லறத் தோழிக்கு நன்றி )

50 கருத்துகள்:

இராகவன் நைஜிரியா சொன்னது…

என்னத்த சொல்ல... உங்களால் முடிஞ்சது நிறுத்திட்டீங்க...

ஹேமா சொன்னது…

நானும் என்னத்தைச் சொல்ல அரசு.என் அப்பாவை அம்மா 40 வருஷமாகத் திருத்தப் பாக்கிறாங்க.
முடில.கை விட்டாச்சு.அருமையாச் சொல்லியிருக்கீங்க.ஏறுறவங்களுக்குத்தான் ஏறும்.உங்களுக்குப் பாராட்டு - வாழ்த்து.உங்கள் தோழிக்கு நன்றி.

சாந்தி நேசக்கரம் சொன்னது…

விரலிடுக்கில் ...
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நீ ...
நழுவிக்கொண்டிருக்கிறாய் !

சத்தியம் நிறைந்த வரிகள் கருணாகரசு.
உங்களை மாற்றிய தோழிக்கு பாராட்டுக்கள்.

சாந்தி

அப்பாவி முரு சொன்னது…

//ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?//

எனக்காக இல்லை...
அரசாங்கங்களுக்காக.

அனுபவம் சொன்னது…

//அது ... நோய்களை
உனக்குள்ளும் நிரப்பும்
உன் வாரிசுக்கும் பரப்பும் !//

நன்று! பொருள் பொதிந்த பதிவு!
திருந்தியவர்கள் சொல்வதைக் கேட்டு நிச்சயமாக மற்றவர்களும் திருந்துவார்கள்!

அன்புடன் நான் சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
என்னத்த சொல்ல... உங்களால் முடிஞ்சது நிறுத்திட்டீங்க...//

அனைவராலும் முடியும். நிறுத்திய‌ பின்பு அப்பாடா என்று ஒரு ம‌கிழ்விருக்கும் ... முத‌லில் நிறுத்திவிட‌வேண்டும் என்ற‌ ஆசை இருக்க‌ணும். வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
நானும் என்னத்தைச் சொல்ல அரசு.என் அப்பாவை அம்மா 40 வருஷமாகத் திருத்தப் பாக்கிறாங்க.
முடில.கை விட்டாச்சு.அருமையாச் சொல்லியிருக்கீங்க.ஏறுறவங்களுக்குத்தான் ஏறும்.உங்களுக்குப் பாராட்டு - வாழ்த்து.உங்கள் தோழிக்கு நன்றி.//


முர‌ட்டு வைத்திய‌மாக‌ செய்யாது ஆசைப்ப‌ட்டு நிறுத்த‌னும்...அதுதான் வெல்லும்.

புகைத்த‌லை கைவிட்டாத்தான்... என்னை கைபிடிக்க‌லாம் என்று திரும‌ண‌த்திற்கு முன்பே க‌ட்ட‌ளை...


வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

முல்லைமண் கூறியது...
விரலிடுக்கில் ...
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நீ ...
நழுவிக்கொண்டிருக்கிறாய் !

சத்தியம் நிறைந்த வரிகள் கருணாகரசு.
உங்களை மாற்றிய தோழிக்கு பாராட்டுக்கள்.

சாந்தி//

நீநீநீநீண்ட‌ இடைவேளைக்கு பின் த‌ங்க‌ளின் வ‌ருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ சாந்தி.

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி முரு கூறியது...
//ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?//

எனக்காக இல்லை...
அரசாங்கங்களுக்காக.//


அப்புற‌ம் லொக்குலொக்குன்னு இரும்பும் போது, அர‌சாங்க‌மா நெஞ்சுவ‌லித் தாங்கும்?

நன்றி அப்பாவி.

அன்புடன் நான் சொன்னது…

அனுபவம் கூறியது...
//அது ... நோய்களை
உனக்குள்ளும் நிரப்பும்
உன் வாரிசுக்கும் பரப்பும் !//

நன்று! பொருள் பொதிந்த பதிவு!
திருந்தியவர்கள் சொல்வதைக் கேட்டு நிச்சயமாக மற்றவர்களும் திருந்துவார்கள்!//


முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌. தொட‌ர்ந்து வாங்க‌.

சத்ரியன் சொன்னது…

கவிதை அருமை. (உணர்ந்து எழுதியிருப்பதால்...)

ஆனாலும் எனக்குத் தொடர்பில்லாதது.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
கவிதை அருமை. (உணர்ந்து எழுதியிருப்பதால்...)

ஆனாலும் எனக்குத் தொடர்பில்லாதது.//

எழுதியிருப்பது கவிதை அது உமக்கு தொடர்பில்லாததா?

சத்ரியன் சொன்னது…

//எழுதியிருப்பது கவிதை அது உமக்கு தொடர்பில்லாததா?//

கவிதைச் சுமந்திருக்கும் கரு.ணாகரசு

புலவன் புலிகேசி சொன்னது…

//அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !//

உண்மையான வரிகள்.....நல்ல சிந்தனை மிக்க பதிவு.....

க.பாலாசி சொன்னது…

//அந்த நாற்றம்
உன்னை ...
நெருங்கும் தூரத்தை
அதிகரிக்கிறது !//

உண்மையான வரிகள்....

நல்ல சிந்தனை இடுகை...

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//எழுதியிருப்பது கவிதை அது உமக்கு தொடர்பில்லாததா?//

கவிதைச் சுமந்திருக்கும் கரு.ணாகரசு//

அட இது கூட நல்லா இருக்கு என் பேருக்கு இடையில் புள்ளி வச்சது!

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
//அந்த நாற்றம்
உன்னை ...
நெருங்கும் தூரத்தை
அதிகரிக்கிறது !//

உண்மையான வரிகள்....

நல்ல சிந்தனை இடுகை...//

மிக்க நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
//அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !//

உண்மையான வரிகள்.....நல்ல சிந்தனை மிக்க பதிவு.....//

மிக்க நன்றிங்க தங்களின் முதை வருகைக்கும் கருத்துக்கும்... தொடர்ந்து வாங்க புலவன்புலிகேசி.

இன்றைய கவிதை சொன்னது…

//ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?//

சாட்டையடி வரிகள்!
கலக்குங்க கருணா!

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
//ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?//

சாட்டையடி வரிகள்!
கலக்குங்க கருணா!//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ .... என்னோட‌ பெய‌ரை சுருக்கி க‌ரு என்று வேண்டுமானால் எழுதுங்க "க‌ருணா" என்று எழுதுவ‌தை த‌விர்த்திடுங்க‌.... ந‌ன்றி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !
//

ஆகா அருமையா சொல்லிடீங்க
வாழ்த்துகள்

வேல் கண்ணன் சொன்னது…

அருமையான தேவையான கவிதை
உங்களின் தோழிக்கும் நன்றி
//"க‌ருணா" என்று எழுதுவ‌தை த‌விர்த்திடுங்க‌.//
பெயரில் ஒன்றும் இல்லை தோழரே.
'அது' ஏற்படுத்திய மாசு உங்களிடம் ஒட்டாது.

Jerry Eshananda சொன்னது…

கருணையின் அரசே வணக்கம். வாழ்த்துகள் உங்களுக்கு.பீடி கைவிட்டதற்கும்,
இடு கை இட்டதற்கும்..

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !
//

ஆகா அருமையா சொல்லிடீங்க
வாழ்த்துகள்//

மிக்க‌ ந‌ன்றி ந‌ண்பா.

அன்புடன் நான் சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
அருமையான தேவையான கவிதை
உங்களின் தோழிக்கும் நன்றி
//"க‌ருணா" என்று எழுதுவ‌தை த‌விர்த்திடுங்க‌.//
பெயரில் ஒன்றும் இல்லை தோழரே.
'அது' ஏற்படுத்திய மாசு உங்களிடம் ஒட்டாது.//

நீங்க‌ சொல்வ‌தும் ச‌ரிதான்... பெய‌ரில் என்ன‌ இருக்கிற‌து.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா. கூறியது...
கருணையின் அரசே வணக்கம். வாழ்த்துகள் உங்களுக்கு.பீடி கைவிட்டதற்கும்,
இடு கை இட்டதற்கும்..//

மிக்க நன்றிங்க ஜெரி... வருகைக்கும்...கருத்து தருகைக்கும்.

துபாய் ராஜா சொன்னது…

நல்ல சமுதாய அக்கறை கொண்ட பதிவு. திருந்திய உங்களுக்கும் திருத்திய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

//புத்துணர்ச்சி என்று
புகைத்தால் ...
புற்று உணர்ச்சியாய் வந்து
புதைக்கும் !

ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?//

அருமை நண்பரே...

நானும் எனது புகைப்பிடிக்கும் நண்பர்களிடமெல்லாம் இதற்கு பதில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டலாமே என அடிக்கடி கூறுவேன்...

ஈரோடு கதிர் சொன்னது…

கவிதை அருமை

அந்தப்படம் மிகப் பொருத்தம்

//எதோ சாதித்த //

என்ன எளிமையாக சொல்றீங்க..

நீங்கள் செய்தது சாதாரண காரியமே அல்ல..

வாழ்த்துகள்

iNbAh சொன்னது…

நல்ல அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்....

இந்தக் கரு நாக்குக் காரரின் அனுபவப் பாடம் பார்த்தும் படித்தும் திருந்தினால் அதுவே வெற்றி!!!

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
நல்ல சமுதாய அக்கறை கொண்ட பதிவு. திருந்திய உங்களுக்கும் திருத்திய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ துபாய் ராசா.

அன்புட‌ன்,
க‌ருணாக‌ர‌சுசிவ‌ர‌ஞ்ச‌னி
சிவ‌ர‌ஞ்ச‌னிக‌ருணாக‌ர‌சு.

//நானும் எனது புகைப்பிடிக்கும் நண்பர்களிடமெல்லாம் இதற்கு பதில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டலாமே என அடிக்கடி கூறுவேன்...//


ந‌ல்ல‌துங்க‌ ஒருத்த‌ரையாவ‌து திருத்துங்க‌ அது மிக‌ பெரிய‌ புண்ணிய‌ம்!

அன்புடன் நான் சொன்னது…

கதிர் - ஈரோடு கூறியது...
கவிதை அருமை

அந்தப்படம் மிகப் பொருத்தம்

//எதோ சாதித்த //

என்ன எளிமையாக சொல்றீங்க..

நீங்கள் செய்தது சாதாரண காரியமே அல்ல..

வாழ்த்துகள்//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ க‌திர்... த‌ங்க‌ளின் வாழ்த்து என் இல்ல‌றத்தோழிக்கும் உரிய‌து!

அன்புடன் நான் சொன்னது…

iNbAh கூறியது...
நல்ல அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்....

இந்தக் கரு நாக்குக் காரரின் அனுபவப் பாடம் பார்த்தும் படித்தும் திருந்தினால் அதுவே வெற்றி!!!//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ இன்பா....
எப்ப‌வும் என் த‌ள‌த்திற்கு வ‌ர‌லாம்.... த‌டையில்லை.

வசந்தி சொன்னது…

வாழ்த்துக்கள் இந்த பதிவுக்கும் புகைப்பதை நிறுத்தியதற்கும்.

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை.
நான் சொல்லி நிறுத்தியதால் மகிழ்ச்சி(பெருமை).
ஆனால் வெகுகாலமாக நிறுத்திவிட்டேன் என்று சொன்ன பொய்யவும் மறக்க முடியாது.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

கவிதை அருமை.
நான் சொல்லி நிறுத்தியதால் மகிழ்ச்சி(பெருமை).
ஆனால் வெகுகாலமாக நிறுத்திவிட்டேன் என்று சொன்ன பொய்யவும் மறக்க முடியாது.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
வாழ்த்துக்கள் இந்த பதிவுக்கும் புகைப்பதை நிறுத்தியதற்கும்//

மிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்தி.

அன்புடன் நான் சொன்னது…

சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
கவிதை அருமை.
நான் சொல்லி நிறுத்தியதால் மகிழ்ச்சி(பெருமை).
ஆனால் வெகுகாலமாக நிறுத்திவிட்டேன் என்று சொன்ன பொய்யவும் மறக்க முடியாது.//


அது பொய்ய‌ல்ல‌... குடிக்கும் போது... நிறுத்தி பார்த்தேன் அதுவும் நின்ற‌து....அதையே நிறுத்திவிட்டேன் என்று சொன்னேன்....

எப்ப‌டியோ உண்மையிலேயே நிறுத்தி காட்டிட்டேன்ல்ல‌?????
வ‌ர‌ 13 ஆம் தேதியேடு 2 ஆண்டுக‌ள்... எப்ப‌டீடீடீ???

Admin சொன்னது…

அத்தனை வரிகளுக்கு அருமை

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
அத்தனை வரிகளுக்கு அருமை//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ ச‌ந்ரு... தொட‌ர்ந்து வாங்க‌.

இது நம்ம ஆளு சொன்னது…

ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?

அன்புடன் நான் சொன்னது…

இது நம்ம ஆளு கூறியது...
ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?



வருகைக்கு மிக்க நன்றி.

விஜய் சொன்னது…

நான் முதலில் நிறுத்திவிட்டு அப்புறம் கருத்து சொல்வதுதான் சரி

வாழ்த்துக்கள்

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
நான் முதலில் நிறுத்திவிட்டு அப்புறம் கருத்து சொல்வதுதான் சரி

வாழ்த்துக்கள்

விஜய்//


கால‌ம் தாழ்த்தாம‌ல் சீக்கிர‌மே க‌ருத்து சொல்லுங்க‌...விஜ‌ய்.

விஜய் சொன்னது…

டைரி படிக்க வாங்க அரசு

விஜய்

thiyaa சொன்னது…

ஆகா!!!!!

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
ஆகா!!!!//

ஆகாவென‌... முத‌ல் வ‌ருகை... மிக்க‌ ந‌ன்றி தொட‌ர்ந்து வாங்க‌ தியா.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) சொன்னது…

முக்கியமா நிறுத்தப்போறேன் அப்படின்னு நண்பர்களிடம் சொல்ல கூடவே கூடாது. மீறி சொன்னால் நிறுத்தவே முடியாது

அன்புடன் நான் சொன்னது…

கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
முக்கியமா நிறுத்தப்போறேன் அப்படின்னு நண்பர்களிடம் சொல்ல கூடவே கூடாது. மீறி சொன்னால் நிறுத்தவே முடியாது//

த‌ங்க‌ளின் கூற்றை அப்ப‌டியே ஏற்கிறேன். ந‌ன்றி.

Pinnai Ilavazhuthi சொன்னது…

நல்ல கருத்துள்ள
எளிமையான கவிதை!...
நாலு பேரு திருந்துனா
நமக்கு நல்லது தானே!...

புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசித்தால் அது அதை விட அதிக பாதிப்பை அருகிலிருப்பவருக்கு தரும்!... புகைக்காத எங்களுக்காக புகைப்பவர்களே!....

வாழ்த்துக்கள்!...
தமிழன்புடன், இளவழுதி

அன்புடன் நான் சொன்னது…

வீ. இளவழுதி கூறியது...
நல்ல கருத்துள்ள
எளிமையான கவிதை!...
நாலு பேரு திருந்துனா
நமக்கு நல்லது தானே!...

புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசித்தால் அது அதை விட அதிக பாதிப்பை அருகிலிருப்பவருக்கு தரும்!... புகைக்காத எங்களுக்காக புகைப்பவர்களே!....

வாழ்த்துக்கள்!...
தமிழன்புடன், இளவழுதி//

முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌.... தொட‌ர்ந்து வாங்க‌.

Related Posts with Thumbnails