அக்டோபர் 18, 2009

பிரிவு






பிரிவு......

நட்பில்லாதவனுக்கு ...
உடல் அசைவு .

நட்புடையவனுக்கு ...
உயிர்க் கசிவு .

( எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து )

46 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

உண்மை நண்பரே


அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
உண்மை நண்பரே


அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்//


மிக்க நன்றிங்க திகழ்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நன்று!

உங்கள் நண்பர்களையும் பார்க்க முடிந்தது நன்றி!

துபாய் ராஜா சொன்னது…

ஈரடியில் இனியதொரு கருத்து.

வரிகளுக்கேற்ற வண்ணப்படமும் அழகு.

வாழ்த்துக்கள் தோழர்...

அன்புடன் நான் சொன்னது…

அத்திவெட்டி ஜோதிபாரதி கூறியது...
நன்று!

உங்கள் நண்பர்களையும் பார்க்க முடிந்தது நன்றி!//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ . இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் த‌மிழ் ப‌டைப்பாளிக‌ள்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
ஈரடியில் இனியதொரு கருத்து.

வரிகளுக்கேற்ற வண்ணப்படமும் அழகு.

வாழ்த்துக்கள் தோழர்...//

வ‌ருகைக்கும் க‌ருத்து த‌ருகைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ தோழ‌ர்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உங்கள் நண்பர்களை பார்த்ததில் மகிழ்ச்சி நண்பரே!

இராகவன் நைஜிரியா சொன்னது…

அருமை.. அருமை...

மிக அருமை.

ஹேமா சொன்னது…

திருக்குறள்போல இருவரியில் நட்பின் பிரிவு.நல்லாயிருக்கு.

உங்கள் நண்பர்களுக்குள் ஒரு முகம் எனக்குத் தெரிந்த முகம்போலவே இருக்கு !

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இரட்டை வரிகளில் நட்பு சொன்னவிதம் அழகு...

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
உங்கள் நண்பர்களை பார்த்ததில் மகிழ்ச்சி நண்பரே!//

அனைவ‌ரும் த‌மிழால் என‌க்கு வாய்த்த‌ ந‌ண்ப‌ர்க‌ள். அனைவ‌ரும் த‌மிழ் சார்ந்த‌ ப‌டைப்பாளிக‌ள். கௌருத்துரைக்கு மிக்க ந‌‌ன்றி ந‌ண்பா.

அன்புடன் நான் சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
அருமை.. அருமை...

மிக அருமை.//


த‌ங்க‌ளின் பாராட்டுத‌லுக்கு மிக்க நன்றிங்க‌ இராக‌வ‌ன்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
திருக்குறள்போல இருவரியில் நட்பின் பிரிவு.நல்லாயிருக்கு.

உங்கள் நண்பர்களுக்குள் ஒரு முகம் எனக்குத் தெரிந்த முகம்போலவே இருக்கு !//

ஹேமாவின் கருத்துக்கு மிக்க நன்றி..............


//உங்கள் நண்பர்களுக்குள் ஒரு முகம் எனக்குத் தெரிந்த முகம்போலவே இருக்கு//


உண்மைத்தான் நீங்க கண்டுபிடிப்பீர்களா என பார்க்கத்தான்... இதுவரை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்தோம். நாங்க அனைவரும் தமிழால் இணைந்த நண்பர்கள். நண்பர்களுக்குள் கருத்துரை கூட எழுதுவதில்லை என்ற ஒரு கட்டுபாடோடு இருக்கிறோம். ( இனி அதை தகர்க்களாம் என இருக்கிறேன்) அலைப்பேசியில் படைப்பை பற்றிய விவாதங்கள் நாள்தோறும் உண்டு. ஒருமுறை ...அவனுக்கு... மூன்று பிள்ளைகள் உண்டு டும் டும் என மறைந்து எழுதியதும் நானே.

மற்றபடி உங்களின் கவி பார்வையையும்
கண் பார்வையையும் பாராட்டுகிறேன் தோழி. மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
இரட்டை வரிகளில் நட்பு சொன்னவிதம் அழகு...//


இது பிரிவை முன்னிறுத்தி ந‌ட்பை எழுதினேன்... எதிர்பார்ப்பு உள்ள‌ ந‌ட்பைப் ப‌ற்றி பிற‌கு எழுதுகிறேன்.

வ‌ருகைக்கும் க‌ருத்து த‌ருகைக்கும் மிக்க‌ ந‌ன் ந‌ண்பா.

வேல் கண்ணன் சொன்னது…

இரு வரிகளில் உணர்வை சொல்வது
உங்களக்கு புதிது அல்ல தோழரே
முன்பு போல் இந்த கவிதையும்
அருமை.
ஒரு விண்ணப்பம்
புகைபடத்தில் இருக்கும் அனைவரையும்
நீங்களே எங்களுக்கு அறிமுகம் செய்தால்
சிறப்பாக இருக்கும்

இன்றைய கவிதை சொன்னது…

கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல...

கடவுளே!
என்னை நண்பர்களிடமிருந்து
காப்பாற்றுங்கள்!
எதிரிகளை நான்
பார்த்துக் கொள்கிறேன்!

நல்ல கவிதை, தோழரே!

அன்புடன் நான் சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
இரு வரிகளில் உணர்வை சொல்வது
உங்களக்கு புதிது அல்ல தோழரே
முன்பு போல் இந்த கவிதையும்
அருமை.
ஒரு விண்ணப்பம்
புகைபடத்தில் இருக்கும் அனைவரையும்
நீங்களே எங்களுக்கு அறிமுகம் செய்தால்
சிறப்பாக இருக்கும்//

க‌ருத்துரைக்கு மிக்க‌ ந‌ன்றி தோழ‌ரே.

இவ‌ர்க‌ள் சிங்க‌ப்பூரில் ப‌ணிச்செய்யும் த‌மிழ் ந‌ண்ப‌ர்க‌ள்.ஒருநாள் இரவை க‌ட‌ற்க‌ரையில் செல‌விட்ட‌பின் பிரியும் போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ நிழ‌ற்ப‌ட‌ம் அது. இவ‌ர்க‌ளை தவிர்த்து சிங்க‌பூரிலும் த‌மிழ‌க‌த்திலும் நிறைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு.

நாங்க‌ள் அனைவ‌ரும் க‌விதை ம‌ற்றும் த‌மிழ் நிக‌ழ்வுக‌ளால் கை கோர்த்த‌வ‌ர்க‌ள்.

இங்கே இருப்ப‌வ‌ர்க‌ளில்
முத‌லாம‌வ‌ர். கி. கோவிந்த‌ராசு. ந‌ல்ல‌ க‌விஞ‌ர் க‌ன‌ல் போல் க‌ர்ஜிப்பார். ம‌ற்றும் ப‌ட்டிம‌ன்ற‌த்திலும் க‌ல‌க்குப‌வ‌ர்.

இர‌ண்டாம‌வ‌ர். கோ.க‌ண்ண‌ன் ந‌ல்ல‌ க‌விஞ‌ர். "ம‌ன‌விழி" வ‌லைத்த‌ள‌த்தின் ஆசிரிய‌ர். ( ச‌த்திரிய‌ன் ) (ம‌ன்னிப்பாயாக கோ.க‌ண்ணா)

மூன்றாம‌வ‌ர். வேள்பாரி ந‌ல்ல‌க‌விஞ‌ர். "காலபைரவன்" வலைத்தளத்தின் ஆசிரியர். எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌விதையையும் பார்க்காம‌ல் வாசிக்கும் திற‌மையுள்ள‌வ‌ர் (யார்க்க‌விதையையும்)


நாங்காம‌வ‌ர்.உங்க‌ளுக்கும் தோழ‌ர் நானே!

ஐந்தாம‌வ‌ர். க‌ன்ட‌னூர் ச‌சிக்குமார் த‌ன்முனைப்பு பேச்சாள‌ர்.ப‌ட்டிம‌ன்ற‌ பேச்சாள‌ர்... க‌விதையும் எழுதுவார்.

ஆறாம‌வ‌ர். தில்லை சா.வீரைய்யா. நீண்ட‌ க‌விதையாக‌ எழுதுவார் அந்த‌ந்த‌ கால‌க்க‌ட்ட‌ செய்தி அதில் இருக்கும். த‌மிழார்வ‌ம் உள்ள‌வ‌ர்.


இவ‌ர்களைத்த‌விர‌வும் நிரைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு.கால‌ம் வ‌ரும் போது அறிமுக‌ம் செய்கிறேன்.

எங்க‌ளுக்குள் க‌ருத்துரை எழுதிக்கொள்வ‌தில்லை என்று முடிவு செய்து க‌டைபிடிப்ப‌தால் எங்க‌ளின் தொட‌ர்பை வ‌லையில் காட்டிக் கொள்வ‌தில்லை. இனி ந‌ண்ப‌ர்க‌ளுக்குள்ளும் க‌ருத்துரை எழுத‌லாம் என்றிருக்கிறேன் , ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஒத்துக்கொண்டால். ம‌றுமொழியே ப‌திவுப்போல‌ போவ‌தால்..... நன்றிங்க‌ தோழ‌ர். (அம்மாடியோ!)

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல...

கடவுளே!
என்னை நண்பர்களிடமிருந்து
காப்பாற்றுங்கள்!
எதிரிகளை நான்
பார்த்துக் கொள்கிறேன்!

நல்ல கவிதை, தோழரே!//


ர‌ச‌னைக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌ தோழ‌ர்.

வேல் கண்ணன் சொன்னது…

நன்றி தோழர் சிரமத்திற்கு மன்னிக்கவும்
இவர்களுடன் சேர்த்து மற்றவர்களையும்
எனது மிகுந்த அன்பை சொல்லவும்
(மனவிழி -யும் கால பைரவனையும் படிக்க
தொடங்கிவிட்டேன்)

அன்புடன் நான் சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
நன்றி தோழர் சிரமத்திற்கு மன்னிக்கவும்
இவர்களுடன் சேர்த்து மற்றவர்களையும்
எனது மிகுந்த அன்பை சொல்லவும்
(மனவிழி -யும் கால பைரவனையும் படிக்க
தொடங்கிவிட்டேன்)



சிரமமில்லை தோழரே... பெருமையாகத்தான் உள்ளது.

Kala சொன்னது…

உங்கள் இருவரியில்
நட்பின் முகவரி தெரிகிறது
நன்று.
ஹேமா!! எப்படி??அப்படி??.....
அவ்வளவு கூர்மையானயான
கண்கள்.

கருணாகரசுஉஉஉஉஉ
சத்திரியன் உங்களை...............????
இலைமறை காயாக இருந்திருந்தால்
நன்றாய் இருக்கும் {என் கருத்து}

சத்ரியன் சொன்னது…

//உண்மைத்தான் நீங்க கண்டுபிடிப்பீர்களா என பார்க்கத்தான்... இதுவரை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்தோம். நாங்க அனைவரும் தமிழால் இணைந்த நண்பர்கள். நண்பர்களுக்குள் கருத்துரை கூட எழுதுவதில்லை என்ற ஒரு கட்டுபாடோடு இருக்கிறோம். ( இனி அதை தகர்க்களாம் என இருக்கிறேன்) அலைப்பேசியில் படைப்பை பற்றிய விவாதங்கள் நாள்தோறும் உண்டு.//

கருணாகரசு,

உங்களின் " நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."

நம்மிடையிலான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதற்கு முன்னால் என்னுடனும் கலந்தாலோசித்திருக்கலாம்.

// ஒருமுறை ...அவனுக்கு... மூன்று பிள்ளைகள் உண்டு டும் டும் என மறைந்து எழுதியதும் நானே.

மற்றபடி உங்களின் கவி பார்வையையும்
கண் பார்வையையும் பாராட்டுகிறேன் தோழி.//

மதிப்பிற்குறிய நண்பா,

உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாத/எழுதாத நீங்கள், எனக்கு " மூன்று குழந்தைகள் " என்று குறிப்பிட்டிருப்பது எந்த அளவிற்கு "உண்மை" என்பதை தெளிவு படுத்திவிட்டால் சிறப்பாயிருக்கும். (உங்களின் பின்னூட்டத்தை என் மனைவி படிக்க நேர்ந்தால் ...?)

ஹேமாவிற்கு நல்ல கண்பார்வை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
உங்கள் இருவரியில்
நட்பின் முகவரி தெரிகிறது
நன்று.
ஹேமா!! எப்படி??அப்படி??.....
அவ்வளவு கூர்மையானயான
கண்கள்.

கருணாகரசுஉஉஉஉஉ
சத்திரியன் உங்களை...............????
இலைமறை காயாக இருந்திருந்தால்
நன்றாய் இருக்கும் {என் கருத்து}//


தோழி க‌லாவின் க‌ருத்துக்கு மிக்க‌ ந‌ன்றி....

ஆனா இந்த‌ கால‌த்தில் க‌ள்ள‌க்காத‌லைகூட‌ வெளிப்ப‌டையாக‌ செய்யும் நாக‌ரிக‌ யுக‌த்தில்... எங்க‌ளின் (நமது) ந‌ல்ல‌ ந‌ட்பை ஏன் வெளிப்ப‌டுத்த‌ கூடாது???

ஏற்பீர்க‌ள்தானே... பீசான் க‌லா.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...

//உங்களின் " நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."//

மிக்க‌ ந‌ன்றி (உள் குத்து இல்லையே!)

//நம்மிடையிலான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதற்கு முன்னால் என்னுடனும் கலந்தாலோசித்திருக்கலாம்.//

உன்மீது என‌க்கிருக்கும் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைத்தான் கார‌ண‌ம்.


//மதிப்பிற்குறிய நண்பா,

உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாத/எழுதாத நீங்கள், எனக்கு " மூன்று குழந்தைகள் " என்று குறிப்பிட்டிருப்பது எந்த அளவிற்கு "உண்மை" என்பதை தெளிவு படுத்திவிட்டால் சிறப்பாயிருக்கும். (உங்களின் பின்னூட்டத்தை என் மனைவி படிக்க நேர்ந்தால் ...?)//


நீயே நினைத்துப்பார் ந‌ண்பா... திரும‌ண‌மே ந‌ட‌க்காத‌து போல‌ எவ்வ‌ள‌வு அல‌ப்ப‌றை செஞ்சி... நேக்கா ப‌திவு போட்டே... உன் காத‌ல் நிறைவேற‌ அர‌ங்க‌ பெருமாள் அண்ண‌ன் கூழு காச்சி ஊத்துற‌ அள‌வுக்கு போன‌தால் தான்... அப்ப‌டி ஒரு த‌வ‌றான‌ க‌ருத்தை (வ‌யிறு எரிய‌) போட்டேன். எத‌ற்கும் ஒரு எல்லை உண்டு அல்ல‌வா?

ச‌ரி, இப்ப‌ ஒரு குழ‌ந்தைக்கு (சாரலின்பா) த‌க‌ப்ப‌னான‌... த‌ங்க‌ளை "பெருசு"ன்னு சொன்னாகூட‌ கோவிச்சிக்க‌மாட்டிங்க‌தானே?????? ஹாஹ‌ஹா.எப்ப‌டீ???

//ஹேமாவிற்கு நல்ல கண்பார்வை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.//

நீங்க‌ ம‌ட்டும் அல்ல‌... க‌லாவும் அப்ப‌டித்தான் சொன்னாங்க‌.

எப்ப‌டியோ... முத‌ல்முறையாக‌ என் த‌ள‌த்தில் எழுதிய‌துக்கு மிக்க‌ ந‌ன்றி.

சாரலின்பாவை பத்திரமா வளர்த்து எங்க வீட்டுக்கு அனுப்பிவை. (இனியாரும் மனு போடாதிங்கப்பு)

ஹேமா சொன்னது…

சத்ரியா...எப்பிடி கண்டு பிடிச்சேன்.சத்திரியனின் கண்தான் காட்டிக்கொடுத்தது அவரை.

நண்பர்களில் கலகலப்பு சந்தோஷமாயிருக்கு.

சத்ரியன் சொன்னது…

//சத்ரியா...எப்பிடி கண்டு பிடிச்சேன்.சத்திரியனின் கண்தான் காட்டிக்கொடுத்தது அவரை.//

ஹேமா,

உளவுத்துறையில வேலைப் பாக்கறீங்களோ?( நான் குற்றவாளி இல்ல.)

( நண்பர் கருணாகரசு சமீபத்தில் ஒரு மேடையில் பேசத்தொடங்கும் போது , பெரியோர்கள் அனைவருக்கும் "காட்டிக்கொடுக்காத இந்த கருணா" வின் மாலை வணக்கம், எனத் தொட‌ங்கினார்.

இந்த இடுகையில் எங்கள் படத்தை இணைத்து "காட்டிக் கொடுத்த " கருணா வாகி விட்டார்.)

//நண்பர்களில் கலகலப்பு சந்தோஷமாயிருக்கு. //

உங்களுக்கு சந்தோஷமாயிருந்தா எனக்கும் சந்தோஷம் தான்.

மகேஷ் : ரசிகன் சொன்னது…

கவித கவித....


நல்லாயிருக்கு,

விஜய் சொன்னது…

நண்பர்கள் படம் பார்த்த திருப்தி

வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா சொன்னது…

//சத்ரியன்...ஹேமா,
உளவுத்துறையில வேலைப் பாக்கறீங்களோ?
( நான் குற்றவாளி இல்ல.)

இதுக்கு பதில் சொல்லப்போனா நான் வம்பில மாட்டணும் வேணாம்.

தோழர் கருணாகரசுவை நான் முழுப்பெயரோடு அழைப்பதற்குக் காரணமே...அதுதான் !இனி அரசு என்று சொல்லலாம் என்றிருக்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
சத்ரியா...எப்பிடி கண்டு பிடிச்சேன்.சத்திரியனின் கண்தான் காட்டிக்கொடுத்தது அவரை.

நண்பர்களில் கலகலப்பு சந்தோஷமாயிருக்கு.//

இப்ப‌டி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பார்த்தா யார்தான் க‌ண்டுபிடிக்க‌ மாட்டாங்க‌????

நண்பர்களில் கலகலப்பு சந்தோஷமாயிருக்கு//

மிக்க நன்றி ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...

( நண்பர் கருணாகரசு சமீபத்தில் ஒரு மேடையில் பேசத்தொடங்கும் போது , பெரியோர்கள் அனைவருக்கும் "காட்டிக்கொடுக்காத இந்த கருணா" வின் மாலை வணக்கம், எனத் தொட‌ங்கினார்.

இந்த இடுகையில் எங்கள் படத்தை இணைத்து "காட்டிக் கொடுத்த " கருணா வாகி விட்டார்.)//

அட‌பாவி... அப்பாவி என்னை தூக்கிவிவ‌துபோல‌ தூக்கி க‌வுத்திட்டியே க‌ண்ணா.

அதையே "அறிமுக‌ ப‌டுத்திய‌ க‌ருணாக‌ர‌சு எண்டு புரிந்து கொள்ள‌லாமே"

(உனக்கு வேணும்டா.... நான் என்னைச்சொன்னேன்)

அன்புடன் நான் சொன்னது…

மகேஷ் கூறியது...
கவித கவித....


நல்லாயிருக்கு,//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ தோழ‌ரே... த‌ட‌ர்ந்து வாங்கோ.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
நண்பர்கள் படம் பார்த்த திருப்தி

வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ விஜ‌ய்... க‌ருத்துக்கும் வாழ்த்துக்கும்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
//சத்ரியன்...ஹேமா,
உளவுத்துறையில வேலைப் பாக்கறீங்களோ?
( நான் குற்றவாளி இல்ல.)

இதுக்கு பதில் சொல்லப்போனா நான் வம்பில மாட்டணும் வேணாம்.

தோழர் கருணாகரசுவை நான் முழுப்பெயரோடு அழைப்பதற்குக் காரணமே...அதுதான் !இனி அரசு என்று சொல்லலாம் என்றிருக்கிறேன்.//

உங்க‌ விருப்ப‌ம் எப்ப‌டிவேணாலும்.அழைத்துக்கொள்ளுங்க‌ள்.
மீள் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி ஹேமா.

வசந்தி சொன்னது…

"கவிதை மிக அருமை"

சிவரஞ்சனி மிக்க நலம். மன்னிக்கவும் கொஞ்சம் பிசியாக இருந்தேன் அதனால்தான் கருத்துரை உடனே எழுதமுடியவில்ல.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
"கவிதை மிக அருமை"

சிவரஞ்சனி மிக்க நலம். மன்னிக்கவும் கொஞ்சம் பிசியாக இருந்தேன் அதனால்தான் கருத்துரை உடனே எழுதமுடியவில்ல.//

மிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்தி.

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான வரிகள்.

சத்ரியன் சொன்னது…

//இப்ப‌டி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பார்த்தா யார்தான் க‌ண்டுபிடிக்க‌ மாட்டாங்க‌???? //

அரசு (ஹேமா சூட்டியிருக்கும் புதுப்பெயர்),

அந்த "உர்ர்ர்ர்ர்" பார்வையில மயங்கி தான் உன் தங்கச்சி (கட்டினா இவரைத்தான் கட்டுவேன்னு ரெண்டு கால்ல நின்னதே) கழுத்தை நீட்டின கதைய மறந்திட்டீங்களா மச்சான்.

பழசையெல்லாம் கிள‌றாதிங்க மாப்பு.

வால்பையன் சொன்னது…

நல்ல கவிதை!

அன்புடன் நான் சொன்னது…

விக்னேஷ்வரி கூறியது...
அழகான வரிகள்.//

க‌ருத்துரைக்கும் முத‌ல் வ‌ருகைக்கும் ந‌ன்றி தோழி.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//இப்ப‌டி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பார்த்தா யார்தான் க‌ண்டுபிடிக்க‌ மாட்டாங்க‌???? //

அரசு (ஹேமா சூட்டியிருக்கும் புதுப்பெயர்),

அந்த "உர்ர்ர்ர்ர்" பார்வையில மயங்கி தான் உன் தங்கச்சி (கட்டினா இவரைத்தான் கட்டுவேன்னு ரெண்டு கால்ல நின்னதே) கழுத்தை நீட்டின கதைய மறந்திட்டீங்களா மச்சான்.

பழசையெல்லாம் கிள‌றாதிங்க மாப்பு.//


அந்த‌ உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பார்வையை பார்த்து புள்ள‌ ப‌ய‌ந்து விழுந்த மயக்கத்தைத்தான், மாப்புள்ள தப்பா புரிஞ்சி தாலிகட்டுனிங்க‌ என்ப‌தே
அப்புற‌மாத்தான் தெரிஞ்சிசுங்க‌.... அதுக்காக‌த்தான் உன்னையே விள‌க்கு க‌ம்ப‌த்துல‌ க‌ட்டுவேன்னு சொன்ன‌த‌ எப்ப‌டியேல்லாம் பின்னி,திசைதிருப்புறிங்க‌?

வீணா கோப‌த்த‌ கிள‌றாதிங்க‌ ஆமா.

அன்புடன் நான் சொன்னது…

வால்பையன் கூறியது...
நல்ல கவிதை!

மிக்க நன்றிங்க.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

வாழ்த்துக்கள் கவிதைக்கும் கவிதை உருவாக காரணமாக இருந்த நண்பர்களுக்கும்.

அன்புடன் நான் சொன்னது…

சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
வாழ்த்துக்கள் கவிதைக்கும் கவிதை உருவாக காரணமாக இருந்த நண்பர்களுக்கும்.//

க‌விதைக்கு வாழ்த்து ச‌ரி....

க‌விதை உருவாக‌ கார‌ண‌மான‌வ‌ர்க்கும் என்ப‌து ... பிரிவுக்கு கார‌ண‌மான‌வ‌ர்க்கும் என்ற‌ பொருள் வ‌ருகிற‌தே க‌வ‌னித்தாயா?

இரசிகை சொன்னது…

nalla idukai.......

அன்புடன் நான் சொன்னது…

இரசிகை கூறியது...
nalla idukai.......//

மிக்க‌ ந‌ன்றிங்க‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்.

Related Posts with Thumbnails