பிப்ரவரி 26, 2013

காதல் தின்றவன் -12

வாசலில்
தண்ணீர் தெளித்து
புள்ளி வைக்கிறாய் நீ.
மனம்
உன்னைச்சுற்றி
கோலமிடுகிறது.


5 கருத்துகள்:

அருணா செல்வம் சொன்னது…

அருமை.

சே. குமார் சொன்னது…

அது சரி.
அண்ணிக்குத் தெரியுமா?

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…


வணக்கம்

கொஞ்சும் தமிழில் கொடுத்த குளிர்கோலம்
நெஞ்சுள் மிளிரும் நிலைத்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

இளமதி சொன்னது…

அருமையாக இருக்கிறது உங்கள் கவிகள்!

புள்ளி வைத்தவளைத்
தள்ளி நின்று பார்த்துவிட்டு
காலம் கைகொடுக்குமென்று
கோலம் போட்டதோ உம்மனது...

வலைச்சரம் கண்டு உங்கள் கவிச்சரம் காணவந்தேன். வாழ்த்துக்கள்!

Chellappa Yagyaswamy சொன்னது…

புள்ளிக்கோலம், பல்தெறிக்கும் வெள்ளைக்கவிதை..என்றெல்லாம் அழகாக வருகிறது வார்த்தைகள். இன்னும் அதிகம் எழுதலாமே நீங்கள்?

Related Posts with Thumbnails