உன் மீது எனக்கிருந்த ...
பழைய காதலின்
நினைவுச் சுவட்டோடு...
எழுதுகிறேன்.
உன்னை கையாள்வது
ஒரு கலை!.
தகவல்கள் எப்படியாயினும்
ஓர் பிணைப்போடுதான்
ஆரம்பிக்கப்படுவாய்.
உலகம் முழுதும்
வியாப்பித்திருந்த உன்னை
ஓர் மூலையில் ஒதுக்கியதில்
நானும் ஒருவன்!.
என் விடுதிக்காலத்தில்
என் தேவைகளுக்கான
தூதுவன் நீதான்!.
நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும்... பலமும்
நீயே தான்!.
உன்னை பாவிக்கும் போது
சிந்திக்கும்...
அவகாசம் இருந்ததால்
நீ,
நிதானத்தின் அடையாளமானாய்!.
முன்பொரு காலத்தில்
உன்னை
புறாவின் காலில்
கட்டி அனுப்பினார்கள்
பின்...
முத்திரை குத்தி அனுப்பினார்கள்.
இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.
அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.
(முன்பு இணைய இதழில் வெளியான என் கவிதை )
Tweet |
51 கருத்துகள்:
//உன்னை பாவிக்கும் போது
சிந்திக்கும்...
அவகாசம் இருந்ததால்
நீ,
நிதானத்தின் அடையாளமானாய்!.//
அழகிய வரிகள்...
ஆதங்கத்துடனான கவிதை....
//நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும்... பலமும்//
கடிதங்கள் எத்தனையோ செய்திகளைக் கொண்டு வருகின்றன.
//எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்//
உண்மை.. சரியானக் கடிதம்.
அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்//
கடிதங்களை மறக்காமல் கவிதையே எழுதிவிட்டீர்கள்!!!
க.பாலாசி கூறியது...
//உன்னை பாவிக்கும் போது
சிந்திக்கும்...
அவகாசம் இருந்ததால்
நீ,
நிதானத்தின் அடையாளமானாய்!.//
அழகிய வரிகள்...
ஆதங்கத்துடனான கவிதை....//
மிக்க நன்றிங்க பாலாசி.
அரங்கப்பெருமாள் கூறியது...
//நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும்... பலமும்//
கடிதங்கள் எத்தனையோ செய்திகளைக் கொண்டு வருகின்றன.
//எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்//
உண்மை.. சரியானக் கடிதம்.
தங்களின் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றிங்க.
தேவன்மாயம் கூறியது...
அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்//
கடிதங்களை மறக்காமல் கவிதையே எழுதிவிட்டீர்கள்!!!//
கடிதம் எழுதுவது என்பது எனக்கு பிடித்த விடயம்.... அது ஒரு சுகம்..... தற்பொது அது கைநழுவி போய்விட்டது.... உண்மையிலேயே அது என் ஆதங்கம் மருத்துவரே......
மிகக நன்றி.
//உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.//
எந்த மெயில் ஐடிக்கு கடிதம் டைப்னீங்க
இஃகிஃகி
ஈரோடு கதிர் கூறியது...
//உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.//
எந்த மெயில் ஐடிக்கு கடிதம் டைப்னீங்க
இஃகிஃகி//
கடிதத்திற்காக ஒரு கவிதை எழுதினேனா.... அந்த கவிதையே கொஞ்சம் நீளமா ஆனதால அதை கடிதம் என்று வைத்துக்கொண்டேன்...இப்போ கடிதத்திற்கு ஒரு கடிதம் எழுதிய பொருள் வருகிறத... யப்பா யப்பப்பபா...ம்ம்ம்ம்ம்ம்
கவிதை அருமை!!
கலக்குங்க கருணா!!
-கேயார்
அடடா மறைந்த நினைவுகளை துளிர்க்க வைத்து விட்டீர்கள் அரசு
நண்பனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
விஜய்
மிக நல்ல கவிதை கருணா!
அட்டகாசம் புலவரே...
கடுதாசி எப்படியிருக்கும் என இனி வரும் தலைமுறை கேட்காமலிருக்க வேண்டும்..
:(
அன்று...மையால் எழுதினார்கள்
அதில் மையல் இருந்தது.
இன்று..கையால் அடிக்கிறார்கள்
{மின்னஞ்சல்,குறுந்தகவல்}
கடுகதியாய் வந்து பல தரிப்புகளில்
நிற்காமலே ஓடி விடுகிறது
என்ன!அரசு சிவரஞ்சனி
வர தட்சணையாக கொடுக்கப்பட்டவையோ
அந்தக் கட்டுகள்.
நல்ல நினைவு கூரலான கவிதை நன்றி
அந்தக் காலத்தில் கடிதங்கள் வரும் சுவாரஸ்யம், படிக்கும் சுவாரஸ்யமே தனிதான்...அந்த சுகம் இனி வருமா என்ன?
மறைந்து கொண்டிருக்கும் அல்லது மறைந்துவிட்ட கடிதங்கள்.விஞ்ஞான வளர்ச்சியால் பாச பந்தங்களின் சுவடுகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் சுவிஸ் வந்த நேரம் தோலைபேசிக் கட்டணம் உச்சத்தில்.
அதனால் ஒரு பெரிய கட்டுக் கடிதங்கள்.ஆனால் இப்போது ஆசைக்கு அப்பாவிடம் கேட்டு எழுதி வாங்கி வைத்திருக்கிறேன்.பிறந்த நாளுக்குக் கூட தொலைபேசிதான்.
அப்பாவின் கடிதங்கள் முன்னாலிருந்து குட்டியம்மாவுக்கு என்று தொடங்கிக் கதை சொலவதுபோல இருக்கும்.
அம்மாவுக்கு கொஞ்சம் அலுப்பு.
என்றலும் என் செல்வத்துக்கு என்று நாலு வரி அப்பாவின் கடிதத்தின் கீழே எழுதியிருப்பா.இழந்தவைகளின் வரிசையில் கடிதமும் ஒன்று.கடிதம் பற்றிச் சொல்லிப் பழைய நினவலைகளைக் கிளறிவிட்டீர்கள்.
என் பதிவில் இந்த வாரம் முழுதுமே மாவீரர் தினத்தையொட்டியே கவிதைகள் போடுகிறேன்.சந்தேகம் ஏன் ?அரசு,அன்று நீங்கள் கேட்டிருந்த அந்த வசனம் எங்கள் தங்கத் தலவர் சொன்ன வசனமேதான்.
m........kaditham yezhuthum murai nam santhathikalukku theriyaamal poividum abaayam irukkirathu..:(
இன்றைய கவிதை கூறியது...
கவிதை அருமை!!
கலக்குங்க கருணா!!
-கேயார்//
மிக்க நன்றிங்க கேயார்.
கவிதை(கள்) கூறியது...
அடடா மறைந்த நினைவுகளை துளிர்க்க வைத்து விட்டீர்கள் அரசு
நண்பனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
விஜய்//
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க விஜய்.
பா.ராஜாராம் கூறியது...
மிக நல்ல கவிதை கருணா!//
மிக்க நன்றிங்க பாரா.
பிரியமுடன்...வசந்த் கூறியது...
அட்டகாசம் புலவரே...
கடுதாசி எப்படியிருக்கும் என இனி வரும் தலைமுறை கேட்காமலிருக்க வேண்டும்..
:(//
கொஞ்சம் கடுதாசியை பத்திரபடுத்துவது நல்லது வசந்த்.... இனிவரும் தலைமுறைக்கு காட்டுவதற்கு.... வசந்தின் வருகைக்கு மிக்க நன்றி.
Kala கூறியது...
அன்று...மையால் எழுதினார்கள்
அதில் மையல் இருந்தது.
இன்று..கையால் அடிக்கிறார்கள்
{மின்னஞ்சல்,குறுந்தகவல்}
கடுகதியாய் வந்து பல தரிப்புகளில்
நிற்காமலே ஓடி விடுகிறது//
சரியாக சொன்னீர்கள் கலா.
என்ன!அரசு சிவரஞ்சனி
வர தட்சணையாக கொடுக்கப்பட்டவையோ
அந்தக் கட்டுகள்.//
கலா,..... தங்கத்தைதான் வரதட்சணையாக வாங்குவார்கள்...அதை தங்கத்திடமே வாங்கமுடியுமா?
நல்ல நினைவு கூரலான கவிதை நன்றி//
மிக்க நன்றி கலா.
ஸ்ரீராம். கூறியது...
அந்தக் காலத்தில் கடிதங்கள் வரும் சுவாரஸ்யம், படிக்கும் சுவாரஸ்யமே தனிதான்...அந்த சுகம் இனி வருமா என்ன?//
இந்த ஏக்கம் எனக்கும் உண்டு ஸ்ரீராம்.
வருகைக்கு மிக்க நன்றிங்க.
ஹேமாவிற்கு.....
கடிதம் அதை எழுதுவதும் ... படிப்பதும் மிக மகிழ்வானது.... இனிவரும் தலைமுறைக்கு அந்த கொடுப்பிணை இல்லை. கடிதங்களை பத்திரபடுத்துங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூறலாம்......
தங்களின் கடித நினைவுகள்
நெகிழ்வாக இருந்தது.
அது தேசிய தலைவரின் சொற்றொடர் தானா?... மிக்க நன்றி ஹேமா.
இரசிகை கூறியது...
m........kaditham yezhuthum murai nam santhathikalukku theriyaamal poividum abaayam irukkirathu..:(//
தங்களின் கருத்து உண்மையே....
வருகைக்கு மிக்க நன்றிங்க.
//இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.//
மாமா,
சிந்திக்க வைக்கும் வரிகள்!
சத்ரியன் கூறியது...
//இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.//
மாமா,
சிந்திக்க வைக்கும் வரிகள்!//
தங்களின் கருத்தை ஏற்கிறேன் பெருசு.... அந்த ரெண்டேழுத்துதான்.... உனக்கு மனசாட்சியே இல்லையா பெருசு.?
அழகிய வரிகள்...
உண்மைதான்....கடிதம் தந்த மகிழ்ச்சியை ஈ-மெயில்கள் தருவதில்லை...
புதியன பழையவனவை தயவு தாட்சண்யம் இன்றி கொன்று போட்டு கொண்டுள்ளது. அதற்கு நாமும் சங்கும் ஊதி விட்டு கவிதையும், பின்னூட்டமும் போட்டு கொண்டு இருக்கிறோம்.
//அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.//
நல்ல கவிதை நண்பா
தியாவின் பேனா கூறியது...
அழகிய வரிகள்...//
மிக்க நன்றிங்க தியா.
ரோஸ்விக் கூறியது...
உண்மைதான்....கடிதம் தந்த மகிழ்ச்சியை ஈ-மெயில்கள் தருவதில்லை...//
உண்மையை ஒத்துக்கொண்டமைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ரோஸ்விக்.
tamiluthayam கூறியது...
புதியன பழையவனவை தயவு தாட்சண்யம் இன்றி கொன்று போட்டு கொண்டுள்ளது. அதற்கு நாமும் சங்கும் ஊதி விட்டு கவிதையும், பின்னூட்டமும் போட்டு கொண்டு இருக்கிறோம்.//
அப்படித்தான் மாறிப்போச்சு காலம்... வருகைக்கு மிக்க நன்றிங்க தமிழ் உதயம்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
//அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.//
நல்ல கவிதை நண்பா//
மிக்க நன்றிங்க ஞானசேகரன்.
ம்ம்ம்ம்ம்...கடிதங்கள்!!!!!!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/11/blog-post_22.html
அதே புலம்பல்தான்!
அன்புடன் அருணா கூறியது...
ம்ம்ம்ம்ம்...கடிதங்கள்!!!!!!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/11/blog-post_22.html
அதே புலம்பல்தான்!//
வருகைக்கு நன்றி... இதோ வருகிறேன்...நன்றி.
அருமையான கவிதை. சிவரஞ்சனி நல்லபடியா வந்துசேர்ந்துவிட்டாலா.
வசந்தி கூறியது...
அருமையான கவிதை. சிவரஞ்சனி நல்லபடியா வந்துசேர்ந்துவிட்டாலா.//
வருகைக்கு மிக்க நன்றி வசந்தி....தோழி வந்து சேர்ந்துவிட்டாள்... இருவரும் நலம்.
தியாவின் பேனா கூறியது...
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்//
தங்களின் வி்ருதினை மகிழ்வுடன் ஏற்கிறேன். விருதுக்கு மிக்க நன்றிங்க.
என்ன! அரசு மயிலப் பார்த்து
மெயில{எடுக்க}மறந்து போச்சா?!
Kala கூறியது...
என்ன! அரசு மயிலப் பார்த்து
மெயில{எடுக்க}மறந்து போச்சா?!//
இதோ ஒயிலா வந்துடுறேன்....
’இண்டர்போல்’ உங்களைத் தேடுது தெரியுமா? புகார் பண்ணினது நான்.
பெயில்(bail) எடுப்பது யாரு?
அரங்கப்பெருமாள் கூறியது...
’இண்டர்போல்’ உங்களைத் தேடுது தெரியுமா? புகார் பண்ணினது நான்.
பெயில்(bail) எடுப்பது யாரு?//
நானே சரணடைஞ்சுடுறேன்.
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/1_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/1_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/4_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/4_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/1_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/1_buygenericviagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/18_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/18_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/13_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/13_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/16_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/16_buygenericviagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/19_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/19_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/18_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/18_buygenericviagra1.png[/IMG][/URL]
//அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.//
ரொம்ப அழகா இருக்கு, இந்த வரிகள்..
கடிதத்திற்கு கடிதம்... :-)
//இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.
//
மிக அழகான வரிகள்..
அதில் உள்ள வலி தான் எனக்கு தெரிகிறது....
அருமை...
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக