நவம்பர் 20, 2009

காதல் பேசிகள்


உலகப் பந்தின்
இருவேறு திசைகளிலிருந்து
நீயும் நானும்
காதல் பேசிகளானோம்.
*
கடிகார நிமிடமுள்
சில வட்டமடிக்க ,
அலைப்பேசி மின்கலன்
சக்தி இழக்க,
ஏதேதோ ...
பேசி களித்தோம் ,
ஏதேதோ ...
பேசி களைத்தோம் .
*
இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
*
இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .



( திருமணத்திற்கு முன்பு ... இல்லற தோழிக்கு பேசியபோது )
(இது ஓர் மீள் பதிவுங்க ..... யாரும் என்வலைக்கு வராத காலத்தில் எழுதப்பட்டது . அதாவது ... பின்னூட்டமே இல்லாத கவிதைங்க )

53 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக //

வெளிநாட்டில் வேலைசெய்யும் காதலர்களுக்கு நடக்கும் இயல்பான சம்பவம்... அருமை அழகு

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லாயிருக்குங்க:)!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .//

ம்ம்..அதுதானே காதல் காந்தம் மாதிரி...

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது

க.பாலாசி சொன்னது…

//இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
*
இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .//

கவிதை நல்லாருக்குங்க தலைவரே....கல்யாணத்துக்கு முன்புதானே.

V.N.Thangamani சொன்னது…

அருமைங்க, அற்புதமான கவிதை.
பேசினோம் என்பதுமட்டுமே மிஞ்சும்.
என்ன பேசினோம் என்பது இல்லாமல் .
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
வி.என். தங்கமணி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) சொன்னது…

ஹ்ம்ம் எனது திருமண நிச்சயத்திற்கு பிறகு 5 மாதங்கள் இப்படித்தான் நடந்தது

ஹேமா சொன்னது…

அரசு,இப்போ வந்திட்டோமே.

அப்பாடி...தொலைபேசிக்கு,காற்றில் கரையும் சொற்களுக்கு எவ்வளவு விலைகள் கொடுத்திருப்போம்.
கடிதங்கள் எழுத மறந்தல்லோ போச்சு.

துபாய் ராஜா சொன்னது…

மீள்பதிவு என்றாலும் மனதை விட்டு மீளாத பதிவு.
------------------
நம்ம வலைப்பூவை யார் படிச்சுட்டு போனாலும், படிக்காம போனாலும் எழுதிகிட்டேதான் இருப்போம்.நாம் கவிதை எழுதிகிட்டேதான் இருப்போம்.
:))
------------------

திருமணத்திற்கு பின்பு...

கலக பேசிகள்

நாமிருவரும் அலைபேசியில்
பேசினால்கூட வார்த்தை தடிக்கிறது.
வேண்டாத பேச்சுக்கள் பேசியபின்
இருவர் உள்ளமும் வருந்தி துடிக்கிறது.
இதற்காகவே உன் அழைப்பு வந்தாலே எடுக்க என் மனம் தடுக்கிறது...

நட்புடன் ஜமால் சொன்னது…

தலைப்பே அருமை நண்பா!

இன்றைய கவிதை சொன்னது…

கருணா!

இதுதான் கொஞ்சம் லேட்டா வந்தா பின்னூட்டம் போட முடியல!

பின்ன என்னங்க, நம்ம கருத்தையே ஞானசேகரன், வசந்த், பாலாசி சொல்லிட்டு போயிட்டாங்களே!

-கேயார்

(Mis)Chief Editor சொன்னது…

அது சரி, எனக்கு சில சந்தேகங்கள்....

ஆண்தானே டயல் செய்திருப்பான்?!
டாக் டைம் ·ப்ரீதானே?!

-பருப்பு ஆசிரியர்

விஜய் சொன்னது…

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அரசு

வாழ்த்துக்கள்

விஜய்

Admin சொன்னது…

அத்தனை வரிகளும் இரசித்தேன்.

Kala சொன்னது…

காதல்_ஆமாம் அந்த நேரம் எது”கரைந்தாலும்”
தெரியாது .அப்படியொரு ஈர்ப்பு{சுகம்}
கல்யாணம்_ஆகிவிட்டால்...எல்லாமே!
கரைந்துகரைந்து என்னை கடைகிறதே
என்பது... {சுமை}
தத்ரூபமான வரிகள்அரசு நன்றி.

ஆமா காணவே இல்லையே...
அந்த சத்ரியரை
சிலந்தியுடன் போட்டி போட்டு
பின்னுகிறாரா? ..........?வலை

அன்புடன் மலிக்கா சொன்னது…

//இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை!/

அது அப்படித்தன் மறந்துபோகும் காதலாச்சே.. மிக்கவும் நல்லயிருக்கு கவிதை

http://niroodai.blogspot.com

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக //

வெளிநாட்டில் வேலைசெய்யும் காதலர்களுக்கு நடக்கும் இயல்பான சம்பவம்... அருமை அழகு//


காத‌ல‌ர்க்கு ம‌ட்டும‌ல்ல‌......(மனைவியை) காத‌லிக்கின்ற‌ க‌ண‌வ‌னுக்கும் இது தான் ந‌ட‌க்கிற‌து.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
நல்லாயிருக்குங்க:)!//

வ‌ருகைக்கும்....க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
//இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .//

ம்ம்..அதுதானே காதல் காந்தம் மாதிரி...//

உண்மைத்தான்!

மிக்க‌ ந‌ன்றிங்க‌ வ‌ச‌ந்த்!

அன்புடன் நான் சொன்னது…

கவிக்கிழவன் கூறியது...
நன்றாக உள்ளது//

ந‌ன்றிக‌ள்...ப‌ல‌!

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
கவிதை நல்லாருக்குங்க தலைவரே....கல்யாணத்துக்கு முன்புதானே.//

இப்பவும்தான் நண்பா!.... என் வலைதளத்தில் "தலையாட்டி பொம்மைகள்" என்றோரு கவிதையுள்ளது அதை படித்து பார்த்தாலே புரியும்!

அன்புடன் நான் சொன்னது…

வி.என்.தங்கமணி, கூறியது...
அருமைங்க, அற்புதமான கவிதை.
பேசினோம் என்பதுமட்டுமே மிஞ்சும்.
என்ன பேசினோம் என்பது இல்லாமல் .
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
வி.என். தங்கமணி//
த‌ங்க‌ளின் வ‌ருகைக்கும்... வாழ்த்துக்கும் மிக்க‌ ந‌ன‌றிங்க ஐயா.

அன்புடன் நான் சொன்னது…

கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
ஹ்ம்ம் எனது திருமண நிச்சயத்திற்கு பிறகு 5 மாதங்கள் இப்படித்தான் நடந்தது//

உங்க‌ளுக்கு 5 மாத‌ம் தான் என‌க்கு 3 ஆண்டுக‌ள்.....அது ஒரு வாழ்விய‌ல் வ‌ச‌ந்த‌ம்!

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு,இப்போ வந்திட்டோமே.

அப்பாடி...தொலைபேசிக்கு,காற்றில் கரையும் சொற்களுக்கு எவ்வளவு விலைகள் கொடுத்திருப்போம்.
கடிதங்கள் எழுத மறந்தல்லோ போச்சு.//


உண்மைதான் ஹேமா....... நீங்க‌ க‌டிதம் ம‌ற‌ந்த‌தை சொன்னீர்க‌ள்..... அடுத்து "க‌டித‌ம்" ப‌ற்றிய‌ முத்து க‌ம‌ல‌த்திலும் வார்ப்பிலும் வ‌ந்த‌ என் க‌விதையை.... ப‌திவேற்றுகிறேன் ப‌டித்து பாருங்கோ!
வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
மீள்பதிவு என்றாலும் மனதை விட்டு மீளாத பதிவு.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ துபாய் ராசா!

//நம்ம வலைப்பூவை யார் படிச்சுட்டு போனாலும், படிக்காம போனாலும் எழுதிகிட்டேதான் இருப்போம்.நாம் கவிதை எழுதிகிட்டேதான் இருப்போம்.
:)) //

நாலுபேர் ப‌டிச்சாதானே ந‌ம‌க்கு ஒரு இது!


//திருமணத்திற்கு பின்பு...

கலக பேசிகள்

நாமிருவரும் அலைபேசியில்
பேசினால்கூட வார்த்தை தடிக்கிறது.
வேண்டாத பேச்சுக்கள் பேசியபின்
இருவர் உள்ளமும் வருந்தி துடிக்கிறது.
இதற்காகவே உன் அழைப்பு வந்தாலே எடுக்க என் மனம் தடுக்கிறது...//


எல்லா நேர‌ங்க‌ளிலும் அப்ப‌டி அமைந்து விடாது அல்ல‌வா....ஆகையால் பேசுவோம் பேசுவோம் பேசிக்கிட்டே இருப்போம்!!!
ந‌ன்றி!

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
தலைப்பே அருமை நண்பா!//

மிக்க‌ ந‌ன்றிங்க‌.... சின்ன‌வ‌ங்க‌ என்ன‌ சொல்லுறாங்க‌... சிங்க‌பூர் புடிச்சியிருக்காமா?

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
கருணா!

இதுதான் கொஞ்சம் லேட்டா வந்தா பின்னூட்டம் போட முடியல!

பின்ன என்னங்க, நம்ம கருத்தையே ஞானசேகரன், வசந்த், பாலாசி சொல்லிட்டு போயிட்டாங்களே!

-கேயார்//

த‌ங்க‌ளின் வ‌ருகையே என‌க்கு புதிய‌ ச‌க்தி கொடுக்கிற‌துங்க‌... கேயார்!
மிக்க‌ ந‌ன்றி.

rvelkannan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rvelkannan சொன்னது…

நல்ல கவிதை இது தோழரே
//நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .//
இதை நம்பிதான் அலை பேசி நிறுவனமே ஓடுது.
//பின்னூட்டமே இல்லாத கவிதைங்க//
இப்படியா பல கவிதை உங்களிடம் உள்ளது கவியே..
பின்னூட்டம் இல்ல விட்டாலும் அவைகளும் நல்ல கவிதையே
{நான் தான் முதன் முதலில் பின்னூட்டம் இட்டேன் தோழரே
அதை காணவில்லை }

அன்புடன் நான் சொன்னது…

(Mis)Chief Editor கூறியது...
அது சரி, எனக்கு சில சந்தேகங்கள்....

ஆண்தானே டயல் செய்திருப்பான்?!
டாக் டைம் ·ப்ரீதானே?!

-பருப்பு ஆசிரியர்//


எங்க‌ டாக் டைம்மு ஃப்ரீ??? ந‌ல்லாயிருக்கப்பு....
நான் தான் தொட‌ர்பு கொண்டேன்.... 340 டால‌ருங்க‌.... (சுமார் ரூ 10,000 க்கு மேல‌) அதான் அந்த‌ க‌விதை..... இருந்தாலும் அது க‌லையாத நினைவுக‌ள். ந‌ன்றிங்க‌ ப‌... ஆசிரிய‌ர்!

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அரசு

வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ விஜ‌ய்!

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
அத்தனை வரிகளும் இரசித்தேன்.//

ந‌ன்றிக‌ள்... ப‌ல‌!

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
காதல்_ஆமாம் அந்த நேரம் எது”கரைந்தாலும்”
தெரியாது .அப்படியொரு ஈர்ப்பு{சுகம்}
கல்யாணம்_ஆகிவிட்டால்...எல்லாமே!
கரைந்துகரைந்து என்னை கடைகிறதே
என்பது... {சுமை}
தத்ரூபமான வரிகள்அரசு நன்றி.

ஆமா காணவே இல்லையே...
அந்த சத்ரியரை
சிலந்தியுடன் போட்டி போட்டு
பின்னுகிறாரா? ..........?வலை//

வ‌ருகைக்கும்...க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌.

ச‌த்திரிய‌னை தொட‌புக‌ள்ள‌ முடிய‌வில்லை.... அலைபேசி ப‌ய‌ண்பாட்டில் இல்லையாம்! அலுவ‌ல‌க‌ எண்ணில் யாரும் எடுக்க‌வில்லை.... என்ன‌செய்ய‌......?

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
நல்ல கவிதை இது தோழரே
//நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .//
இதை நம்பிதான் அலை பேசி நிறுவனமே ஓடுது.
//பின்னூட்டமே இல்லாத கவிதைங்க//
இப்படியா பல கவிதை உங்களிடம் உள்ளது கவியே..
பின்னூட்டம் இல்ல விட்டாலும் அவைகளும் நல்ல கவிதையே
{நான் தான் முதன் முதலில் பின்னூட்டம் இட்டேன் தோழரே
அதை காணவில்லை }//

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி தோழ‌ரே....

க‌ருத்துரையை நான் நீக்க‌வும் இல்லை... ஆனால் ஏதோ த‌வ‌று நிக‌ழ்திருக்க‌லாம் என‌ நினைக்கிறேன். மீண்டும் வ‌ருகை புரிந்த்திற்கு மிக்க‌ ம‌ன‌ம் நிறைந்த‌ ந‌ன்றிங்க‌ தோழ‌ரே!

Unknown சொன்னது…

நல்ல இருக்குங்க....

அன்புடன் நான் சொன்னது…

பேநா மூடி கூறியது...
நல்ல இருக்குங்க....//

முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌.

ஸ்ரீராம். சொன்னது…

இனிமையான இருபத்து நாலு மணி நேரங்கள்...இல்லை...

tamiluthayam சொன்னது…

யாராலும் காதலிக்க படாத துக்கம் என்னுள்ளே பெருகி வழிகிறது.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். November 21, 2009 10:35 PM
இனிமையான இருபத்து நாலு மணி நேரங்கள்...இல்லை... //


புரிய‌லையே!!!

அன்புடன் நான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…

tamiluthayam கூறியது...
யாராலும் காதலிக்க படாத துக்கம் என்னுள்ளே பெருகி வழிகிறது.//

ஏங்க‌...அப்ப‌டி?

சந்தான சங்கர் சொன்னது…

காதல்
பேசி பேசி
கள் நிறைந்தது
இன்று நினைவுகள்
கவிதையாய்..

அன்புடன் நான் சொன்னது…

சந்தான சங்கர் கூறியது...
காதல்
பேசி பேசி
கள் நிறைந்தது
இன்று நினைவுகள்
கவிதையாய்..//

உண்மையே... !

ஸ்ரீராம். சொன்னது…

காதல் செய்யும் நாட்களில் தொலை பேச இருபத்தி நாலு மணி நேரம் போதாது....அழகன் படத்தில் வரும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.." பாடல் காட்சி நினைவு வந்தது... அதைச் சொன்னேன்...
திருமணத்திற்குப் பின் தொலை பேசி தொல்லை பேசிதான்..

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
காதல் செய்யும் நாட்களில் தொலை பேச இருபத்தி நாலு மணி நேரம் போதாது....அழகன் படத்தில் வரும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.." பாடல் காட்சி நினைவு வந்தது... அதைச் சொன்னேன்...
திருமணத்திற்குப் பின் தொலை பேசி தொல்லை பேசிதான்..//

ஆமாம் அமாம் ... காதல் செய்யும் போது யுக‌ங்க‌ள் கூட‌ நிமிட‌ங்களாம்
பின் நிமிட‌ங்க‌ள் கூட‌ யுக‌ங்க‌ளாம் என‌ ப‌டித்த‌து நினைவுக்கு வருகிற‌து .... த‌ங்க‌ளின் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அரங்கப்பெருமாள் சொன்னது…

//எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
//

பேசினோமா அல்லது கொஞ்சினோமா?


//தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக//

உண்மைதான்.கல்யாணம் நிச்சயம் முடிந்தவுடன் எனது தொலைபேசிக் கட்டணம் ரூ6000.

ஊடகன் சொன்னது…

//இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .//

எனக்கு பிடித்த வரிகள்.........
நல்லாயிருக்குங்க.........

"உழவன்" "Uzhavan" சொன்னது…

இப்பவும் அப்படித்தானா? நிச்சயமா இருக்காது :-)

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
//எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
//

பேசினோமா அல்லது கொஞ்சினோமா?


//தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக//

உண்மைதான்.கல்யாணம் நிச்சயம் முடிந்தவுடன் எனது தொலைபேசிக் கட்டணம் ரூ6000.//

எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும் போலிருக்கு..... இருந்தாலும் என்னைவிட நீங்க குறைவுதான். வருகைக்கும் ... கருத்து தருகைக்கும் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஊடகன் கூறியது...
//இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .//

எனக்கு பிடித்த வரிகள்.........
நல்லாயிருக்குங்க.........//

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க ஊடகன்

அன்புடன் நான் சொன்னது…

" உழவன் " " Uzhavan " கூறியது...
இப்பவும் அப்படித்தானா? நிச்சயமா இருக்காது :-)//

இல்லைங்க... உழவன்... அதேபோல் அதைவிட கூடுதாலாகவும் பேசிக்கொண்டுதான் இருகிறேன். ஒருநாளுக்கு குறைந்தது 2,3 முறை பேசிவிடுவேன் அப்படி பேசாமல் ஒருநாள் கூட இருந்ததில்லை.....ஆனால் முன்பு கட்டணம் மிக அதிகம் (சுமார் 7 ஆயிரம் முதல் 11 ஆயிரம்) இப்போது கட்டண்ம் மிக குறைவு (சுமார் 2 ஆயிரம் போதுமானது...அதாவுது 40 சிங்கப்பூர் டாலர்)

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...தொடர்ந்து வாங்க.

அன்புடன் நான் சொன்னது…

இரசிகை கூறியது...
:)
//

! நன்றிங்க.

arasan சொன்னது…

அருமை மிக அருமை...
உங்களின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் நல்ல துணை அமைந்து விட்டாங்க...
இப்போ அதை இரட்டிப்பாக்கும் வகையில் இளங்கதிர்..

Related Posts with Thumbnails