நவம்பர் 17, 2009

ஏனெனில் நான் கவிஞன்

உங்கள் மனத்தராசு ...
பொருளாதாரத்தையே
எடைபோடுகிறது .
என் தராசுத் தட்டுகளில்...
ஈரமும் அன்பும் தான்
எடைக்கற்கள் .

உடுத்திய உடைகளிலேயே
உட்கார்ந்து விடுகிறது
உங்கள் விழிகள் .
திரையிடாத என்
மனதைப் பார்க்காமல் !

தடாகம் சேறானதும்
மீன் பிடிக்கின்றீர்கள் !
நானோ ...
தாமரையை இரசிக்கிறேன் .

"அவளை" நிலவென்றேன்
பொய் பேசுகிறேன் என்கிற
நீங்களேதான்
நிலவை ஓடிவரச் சொல்லி
சோறு ஊட்டுகிறீர்கள் .

அந்த ...
ரோசா செடியின்
முட்களைச் சபிக்கின்றீர் ...
நீங்கள் .
அங்கே ...
மலர்களை இரசிக்கிறேன் ...
நான் .

துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .
ஏனெனில் ...
நான் ... கவிஞன் .

01-12-2002- ல் மலேசியா தமிழ்நேசனில் வெளியானது ... பின் 2004 - ல் எனது தேடலைச்சுவாசி நூலிலும் இடம் பிடித்த கவிதை ... இன்று வலைத்தளத்திலும் ....
(நிழற்படம் ... கவிமாலை விருது விழாவில் கவிதை வாசிக்கும் பொது 2009 )

29 கருத்துகள்:

V.N.Thangamani சொன்னது…

கவிதை அருமைங்க.... சார்.
எங்கே சில நாட்களாக உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும் காணோம்.
நன்றி அய்யா, வாழ்க வளமுடன்.

தமிழ் அமுதன் சொன்னது…

///துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .///

அருமை...!

தமிழ் சொன்னது…

அருமை

Kala சொன்னது…

என் தராசுத் தட்டுகளில்...
ஈரமும் அன்பும் தான்
எடைக்கற்கள்\\\
எவ்வளவு அழகான,ஆழமான
வார்த்தைகள் உங்கள்
மனதைப்போல்...!!!

அன்புடன் அருணா சொன்னது…

நல்லாருக்கு கவிதை!

பா.ராஜாராம் சொன்னது…

கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு கருணா.

கவி அழகன் சொன்னது…

நல்லா இருக்கு கவிதை

ஹேமா சொன்னது…

உங்கள் கவிமனதை பிரித்து ரசித்து எழுதியிருக்கிறீங்க அரசு.ஒவ்வொரு வரியும் அருமையா இருக்கு.மீண்டும் எங்களோடு இணைந்திருக்கிறீர்கள்.
நன்றி அரசு.

இன்றைய கவிதை சொன்னது…

கருணா! கலக்கிட்டீங்க!
அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள்!!

-கேயார்

(Mis)Chief Editor சொன்னது…

///துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .///

அந்தக் கவிதையால் எங்களுக்குத் துக்கம் வராமல் இருந்தால் சரி!

-பருப்பு ஆசிரியர்

விஜய் சொன்னது…

நல்லா இருக்குங்க அரசு

வாழ்த்துக்கள்

விஜய்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அருமை சகோதரரே...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .
ஏனெனில் ...
நான் ... கவிஞன் .//


Nice...

அரங்கப்பெருமாள் சொன்னது…

//தடாகம் சேறானதும்
மீன் பிடிக்கின்றீர்கள் !
//

ம்ம்ம்... இதான் உலகம்.
அருமையான கவிதை.

தேவன் மாயம் சொன்னது…

அந்த ...
ரோசா செடியின்
முட்களைச் சபிக்கின்றீர் ...
நீங்கள் .
அங்கே ...
மலர்களை இரசிக்கிறேன் ...
நான் .///

நல்ல வரிகள்!!

வேல் கண்ணன் சொன்னது…

//..ஏனெனில் ...
நான் ... கவிஞன் //
என்றும் கவிஞன் நீ !

அன்புடன் நான் சொன்னது…

வி.என்.தங்கமணி, கூறியது...
கவிதை அருமைங்க.... சார்.
எங்கே சில நாட்களாக உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும் காணோம்.
நன்றி அய்யா, வாழ்க வளமுடன்.//

த‌ங்க‌ளின் வாழ்த்துக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஐய்யா.
சில‌நாட்க‌ளாக‌ வேலைப் ப‌ளு... அதுதான் கார‌ண‌ம்... த‌ங்க‌ளின் அன்புக்கு மிக்க‌ ம‌கிழ்ச்சி ஐய்யா.

அன்புடன் நான் சொன்னது…

என்னை உற்சாகமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும்... என் மகிழ்வான நன்றிகள்......

@ மிக்க நன்றிங்க ஜீவன்,


@ திகழின் வருகைக்கு நன்றி,


@ கலா தோழிக்கு நன்றி,

@ அருணா அவர்களுக்கு மிக்க நன்றி,


@ பாரா அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

என்னை உற்சாகமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும்... என் மகிழ்வான நன்றிகள்......

@ கவிக்குமரனாகிவிட்ட கவிகிழவனுக்கு நன்றிகள்.

@ ஹேமாவிற்கு நன்றி (நான் பிரியவே இல்லை... கொஞ்சம் தடைகள் அவ்வளவே)

@ மிக்க நன்றிங்க கேயார்

@ பொறுப்பு...இல்லை இல்லை பருப்பு ஆசிரியரின் முதல் வருகைக்கு நன்றி... தொடர்ந்து பொறுப்புடன் வாங்க பருப்பு ஆசிரியர்.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
நல்லா இருக்குங்க அரசு

வாழ்த்துக்கள்

விஜய்
//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ விஜ‌ய்.

// பிரியமுடன்...வசந்த் கூறியது...
அருமை சகோதரரே...//

மிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்த்.... உங்க‌ளுக்கு பின்னோட்ட‌ம் அனுப்ப‌ இய‌ல‌வில்லை !!!! ஏனென்று பாருங்க‌.

// ஆ.ஞானசேகரன் கூறியது...
//துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .
ஏனெனில் ...
நான் ... கவிஞன் .//


Nice...//


ந‌ன்றி ந‌ண்பா.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
//தடாகம் சேறானதும்
மீன் பிடிக்கின்றீர்கள் !
//

ம்ம்ம்... இதான் உலகம்.
அருமையான கவிதை.//


அண்ண‌னுக்கு அன்பான‌ ந‌ன்றி.


// தேவன் மாயம் கூறியது...
அந்த ...
ரோசா செடியின்
முட்களைச் சபிக்கின்றீர் ...
நீங்கள் .
அங்கே ...
மலர்களை இரசிக்கிறேன் ...
நான் .///

நல்ல வரிகள்!!//


ம‌ருத்துவ‌ரின் க‌ருத்துக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.

//வேல் கண்ணன் கூறியது...
//..ஏனெனில் ...
நான் ... கவிஞன் //
என்றும் கவிஞன் நீ !//


தோழ‌ர் க‌ண்ன‌னுக்கு துடிப்பான‌ ந‌ன்றி.

(அனைவ‌ருக்கும் த‌னித்த‌னியே எழுத‌வே ஆசை.... இன்று ம‌ட்டும் அது இய‌ல‌வில்லை)

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமைங்க.

//"அவளை" நிலவென்றேன்
பொய் பேசுகிறேன் என்கிற
நீங்களேதான்
நிலவை ஓடிவரச் சொல்லி
சோறு ஊட்டுகிறீர்கள் .//

ரசித்தேன்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
அருமைங்க.//


மிக்க‌ ந‌ன்றிங்க‌.

Admin சொன்னது…

நல்ல கவி வரிகள்

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
நல்ல கவி வரிகள்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ ச‌ந்ரு.

இரசிகை சொன்னது…

nice..

அன்புடன் நான் சொன்னது…

இரசிகை கூறியது...
nice..
//

மிக்க நன்றிங்க ரசிகை.

Ashok D சொன்னது…

நல்லாயிருக்குங்க

அன்புடன் நான் சொன்னது…

D.R.Ashok கூறியது...
நல்லாயிருக்குங்க//

மிக்க நன்றிங்க அசோக்.

Related Posts with Thumbnails