பத்தாண்டுகால இடைவெளியில் வாழ்க்கை கோப்பை வசதிகளால் நிரம்பி வழிகிறது.
இலண்டன் மாநகரின் வணிக வீதியில் திடீரென மிரண்டு நடுங்கியப்படி தரையில் படுத்துக்கொண்ட என் மகளை, வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு புரியவைப்பது எப்படி உலங்கூர்தியின் சத்தத்தை.
விரட்டியடிக்கப்பட்ட காயங்கள் இன்று தழுக்புகள் ஆகிவிட்டது.
எந்த இடைவெளிகளும் வடிகால் ஆவதில்லை இருப்பிடம் துறந்த எங்கள் துயரத்திற்கு.