ஐம்புலன்களின்
ஆட்சி பீடம்.
அசையும் தேசத்தின்
தலைநகர்.
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.
உயர்திணை மரத்தின்
அதிசய உச்சிவேர்.
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.
...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.
(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)
குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு?
தங்கமே தங்கமென்று
தாலாட்டி வளர்த்த ரெண்டு
பிள்ளைகள் உயிரைக்கொண்டு
போனதே பேயலை இன்று!
தாய் தகப்பன் தண்ணியோட
தம்பியவன் மன்ணுக்குள்ள
நான் மட்டும் கரையொதுங்கி
நாதியற்று போனேனே.
அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?
நீரும் நிலமும்
நிகழ்த்திய வன்முறை...
கல்லறையானதே - ஒரு
கடலோர தலைமுறை.
தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?
தாகம் தீர்ந்ததா தண்ணீரே!?
உன்னால்...
தரணி சிந்துதே கண்ணீரே!.
(ஆழிப்பேரலை அஞ்சலிக்காக வாசிக்கப்பட்ட கவிதையில் சிலதுளிகள்)
உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!
(நண்பர்களே.... அவ்வபோது வலைவரமுடிய வில்லை ..... நானும் இருக்கிறேன் என்பதற்காக இப்பதிவு .... )
என் மகன் இளங்கதிர்க்கு வாழ்த்தையும் .... பெயர் பரிந்துரையும் அளித்த மதிப்பிற்குரிய வலைபதிவர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி !!!
தானியங்கி முறையில் பதிவேற்றிய என் பதிவுக்கு கருத்துரைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் .
நான் இருக்குமிடத்தில் இணைய தொடர்பின் வீரியம் சரியில்லாததாலும் ... இணைய தொடர்புக்கு வரஇயலாத சூழலாலும் ... உங்களோடு கைகுலுக்க இயலாமைக்கு வருந்துகிறேன் .
நான் எனது விடுமுறையை தீபாவளி வரை நீட்டித்துள்ளேன் . கிடைக்கும் இந்த நேரத்தை என் மகனோடு செலவிடுகிறேன் .
இதோ ... உங்க பார்வைக்கு
என் மகன் இளங்கதிர் . (சி.க.இளங்கதிர், s.k.elangathir)
எனக்கு பெயர் பரிந்துரை செய்தவர்களுக்கும் ... என்னை வாழ்த்தியவர்களுக்கும் ...என் வணக்கம் . அன்புடன் சி.க.இளங்கதிர் .
உங்க வாழ்த்தினால் நான் மகிழ்வோடு இருக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் டாடா .....
என்னைப்பற்றிய என் அப்பாவின் கவிதையை படிங்களேன் .
அசைகள் இல்லாத
கவிதைகளே ... இல்லை .
உன்,
அசைவுகளை மிஞ்சிய
கவிதைகளும் இல்லை.